Ad

வியாழன், 19 ஜனவரி, 2023

புற்றுநோயை வெல்வோம்: ஜன. 29-ல் காவேரி மருத்துவமனை சார்பில் சென்னையில் விழிப்புணர்வு ஓட்டம்! | #K10K

புற்றுநோய், கொடிய நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உடலில் உள்ள அணுக்களின் விபரீதமான வளர்ச்சியே புற்றுநோய் என்று கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம் என்று ஆய்வறிக்கைகள் கணிக்கின்றன. 2025-ம் ஆண்டில் இது 12.8% அதிகரிக்கக்கூடும் என்று இவ்வறிக்கைகள் நம்மை மேலும் கலக்கமடையச் செய்கின்றன. ஆனால், புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் அல்ல என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும்! புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும்போது, நோயாளிகளைக் காப்பாற்றும் சதவிகிதம் மிக அதிகமாக இருக்கிறது.

புற்றுநோய் | #K10K

வருமுன் காக்கும் `ஸ்க்ரீனிங்' சோதனைகள்

வராமல் காப்பதும், வந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிவதும் புற்றுநோயை எதிர்கொள்ளும் சிறந்த வழிமுறைகளாகும். புற்றுநோய் ஏற்படும் முன்னரே, அது வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்களை `ஸ்க்ரீனிங் (screening)' எனப்படும் முன்னெச்சரிக்கை சோதனைகள் மூலம் கண்டறிந்துகொள்ள முடியும். குறிப்பாக மார்பகம், கர்ப்பப்பை மற்றும் பெருங்குடல் சார்ந்த புற்றுநோய்களை அவை வருவதற்கு முன்னரே ஸ்க்ரீனிங் மூலம் கண்டறிந்து தகுந்த முன்னெச்சரிக்கைகளை நாம் எடுத்துக்கொள்ள முடியும்! இதனை முன்னரே கண்டறிந்தால், அவற்றை முழுவதுமாகக் குணப்படுத்துவது சாத்தியமே!

இந்தியர்களில் 70% பேர் இவ்வறிகுறிகளைக் கண்டு கொள்ளாமல், நோய் முற்றிய பிறகே மருத்துவமனையை நாடுகிறார்கள். ஆகவே, உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவருக்கோ புற்றுநோய் அறிகுறிகள் இருந்தால், தயக்கமோ பயமோ தேவையில்லை. தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று உடனுக்குடன் உடல் உபாதைகளைக் களைந்துகொள்வது அவசியம்.

புற்றுநோய் - பொதுவான அறிகுறிகள்:

* அசாதாரண ரத்தப்போக்கு.

* உடலில் வீக்கங்கள்/கட்டிகள்.

* ஆறாத புண்கள்.

* மலம்/சிறுநீர் கழிப்பதில் மாற்றம்/சிரமம்.

* பேசுவதில் சிக்கல்/தீராத இருமல்.

* விழுங்குவதில் சிரமம், பசியின்மை மற்றும் உடல் எடை குறைதல்.

* மச்சம் அல்லது மருக்களில் மாற்றம்.

மார்பகப் புற்றுநோய் | #K10K

ஆரம்பத்திலேயே கண்டறிவோம்!

தவறான வாழ்வியல் முறைகளும் மரபியலும் புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன. புகை மற்றும் மது போன்ற தீய பழக்கங்களைத் தவிர்த்தல், சத்தான உணவுகள், உடற்பயிற்சி மற்றும் மன அமைதி ஆகியன, நோய்களை அண்டவிடாமல் காக்கும். இருப்பினும், சிலருக்கு மரபியல் காரணமாகப் புற்றுநோய் ஏற்படுவதால், குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தாலும், அவரின் ரத்த சொந்தங்கள் தங்களுக்கும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதா என்பதை சோதனைகள் மூலம் கண்டறிந்து கொண்டு, ஆரோக்கியமான வாழ்வியல் முறையைப் பின்பற்றலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி `ஸ்க்ரீனிங்' பரிசோதனைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கேன்சரின் ஆரம்ப அறிகுறிகளை வேரிலேயே கண்டறிந்து சிகிச்சையை ஆரம்பிக்கலாம். (குறிப்பு: ஒவ்வொரு வகையான புற்றுநோய்க்கும் ஸ்க்ரீனிங் பரிசோதனைகளும், கால இடைவெளியும் மாறுபடும்.)

காவேரி மருத்துவமனை நடத்தும் K10K ரன்!

புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டலுக்காக `K10K' எனும் ஓட்டத்தை, ஜனவரி 29, 2023 அன்று சென்னை பெசன்ட் நகரில், காவேரி மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது. 5 கி.மீ மற்றும் 10 கி.மீ என்று இரு பிரிவுகளில் இந்த ஓட்டம் நடைபெறுகிறது. 10 கி.மீ பிரிவில் வெல்லும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, முறையே ரூ.7,500, ரூ.5,000 மற்றும் ரூ.2,500 ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. 16 - 30 வயது, 31 - 45 வயது, 45 - 60 வயது மற்றும் 60+ வயது என ஆண், பெண் பாலருக்கு மொத்தமாக 8 பிரிவுகளில் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

காவேரி மருத்துவமனை நடத்தும் K10K ரன்!

கேன்சர் நிதிக்கு செல்லும் உங்களின் நுழைவுக் கட்டணம்!

ஓட்டத்தில் பங்கேற்க 5 கி.மீ பிரிவுக்கு ரூ.500 கட்டணமும், 10 கி.மீ பிரிவுக்கு ரூ.700 கட்டணமும் செலுத்த வேண்டும். ஓட்டத்தில் கலந்துகொள்வோருக்கு டி ஷர்ட், கேப், பதக்கம் வழங்கப்படும். நீங்கள் கட்டணமாகச் செலுத்தும் பணம் கேன்சர் ஆராய்ச்சிக்கும் ஏழை நோயாளிகளுக்கும் சென்றடையும்.

இந்தப் புது ஆண்டில் நீங்களோ உங்கள் நண்பர் குழுவோ நல்ல காரியங்களில் ஈடுபட நினைத்திருந்தால், K10K ஓட்டத்தில் பங்கேற்று அதைத் தொடங்கலாம். புற்றுநோய் இல்லா உலகம் படைக்க உங்களால் ஆன பங்களிப்பை வழங்கலாம். உங்கள் பெயரை பதிவு செய்ய கடைசி தேதி: 23.1.2023.

காவேரி மருத்துவமனையின் K10K ஓட்டத்தின் பார்ட்னர்கள்: டிஜிட்டல் பார்ட்னர் - அவள் விகடன், ரேடியோ பார்ட்னர் - பிக் எஃப்.எம், புரொமோஷனல் பார்ட்னர் - டைடல் பார்க், அவுட்-டோர் பார்ட்னர் - நெக்ஸ்ட் அட்வர்டைஸிங் சொல்யூஷன்ஸ், மெட்ரோ பார்ட்னர் - சி.எம்.ஆர்.எல், ஃபிட்னெஸ் பார்ட்னர் - பர்ன் அவுட் யூனிசெக்ஸ் ஃபிட்னெஸ் ஸ்டூடியோஸ், ஹைட்ரேஷன் பார்ட்னர் - நைஸ் ஆக்வா, ரெஃப்ரெஷ்மென்ட் பார்ட்னர் - நம்ம கஃபே, எனர்ஜி பார்ட்னர் - ஃபாஸ்ட் & அப், NGO பார்ட்னர் - அலெர்ட், ஹைட்ரேஷன் பார்ட்னர் - கிராண்ட் சென்னை பை ஜி.ஆர்.டி ஓட்டல்ஸ், மல்டிபிளெக்ஸ் பார்ட்னர் - ஏ.ஜி.எஸ் சினிமாஸ்.

#K10K ஓட்டம் பற்றி மேலும் அறியவும், கலந்து கொள்ளவும் பதிவு செய்வது அவசியம். பதிவுக்கு இங்கே க்ளிக் செய்யவும்: https://www.k10k.run/



source https://www.vikatan.com/news/healthy/cancer-awareness-run-in-chennai-on-behalf-of-kaveri-hospital-k10k

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக