சோனி, சட்டையில் அணியக்கூடிய ஏர் கண்டிஷனரை கடந்த ஆண்டு ரியான் பாக்கெட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இப்போது அதன் அடுத்த வெர்ஷனை வெளியிட்டுள்ளது. Reon Pocket 2 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம் அதன் முந்தைய வெர்ஷனை போலவே உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மாடலின் குளிரூட்டும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், உடற்பயிற்சிகளுக்கு மிகவும் பொருத்தமானது மேலும், இது கோடையில் பொதுமக்களின் தினசரி பயன்பாட்டுக்கு மற்றும் பயணத்துக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என்றும் சோனி கூறுகிறது.
இது கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, இதையே குளிர் காலத்தில் வெப்பம் இயக்கியாகவும் பயன்படுத்தலாம். உடல் மேற்பரப்பில் தொடர்புடையதால் இதன் இயந்திர பாகங்கள் துருப்பிடிக்காத வண்ணம் எஃகு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பிரத்யேக ஸ்மார்ட்போன் செயலி மூலம் இந்த சாதனத்தை கட்டுப்படுத்த முடியும். இது வியர்வை- புரூஃப்பாக தயாரிக்கப்பட்டுள்ளாதாக சோனி கூறியுள்ளது. Reon Pocket 2-ன் விலை 14,850 யென் (சுமார் ரூ. 10,300). மற்றும் தற்போது இது ஜப்பானில் மட்டுமே கிடைக்கிறது.
source https://www.vikatan.com/technology/gadgets/sony-reon-pocket-2-ac-launched
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக