தற்போதுள்ள இணைய உலகில் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் யாரவது சொல்லித்தருவார்களாக என்று யாரும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. தனக்குத் தேவையெனப்படுவதை தாமாகவே இணையத்தில் தேடிக்கண்டுபிடித்துக் கற்றுக்கொள்கின்றனர். அதில் அடிப்படை கல்வி முதல் துப்பாக்கி, வெடிகுண்டு தயாரித்தல் என எல்லாமே இன்று இணையத்திலேயே கிடைக்கிறது.
அந்த வகையில் யூடியூப் டுடோரியல் விடியோக்களைப் பார்த்து, உயர் ரக கார்களைத் திருடிவந்த பி.காம் பட்டதாரியை, பெங்களூரு போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்துள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் செய்தித்தாளில் வெளியான தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள முலபாகிலு தாலுக்காவைச் சேர்ந்த அருண்குமார் ஆவார். இவர் ஒரு பி.காம் பட்டதாரி. இவர் ஏற்கெனவே கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆந்திராவிலுள்ள மதனப்பள்ளி துணைச் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் சக குற்றவாளி ராகேஷை என்பவரைச் சிறையில் சந்திருக்கிறார்.
மேலும் அவர், கார் பூட்டுகளை உடைக்கப் பயன்படும் தானியங்கி கருவியைப் பற்றி ராகேஷ் கற்றுக் கொடுத்திருக்கிறார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அருண்குமார், அந்த தானியங்கி கருவியை வாங்கி, பெங்களூருவில் எச்.எஸ்.ஆர் லேஅவுட் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் இரவு நேரங்களில் உயர் ரக வாகனங்களைத் திருடத் தொடங்கியிருக்கிறார்.
பின்னர், திருடிய வாகனங்களைத் தமிழ்நாடு அல்லது ஆந்திராவுக்குச் கொண்டு சென்று, போலியான ஆர்.சி புக்கைப் பயன்படுத்தி அதனைக் குறைந்த விலைக்கு விற்றுள்ளார்' எனத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில், அருண்குமாரிடம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பத்து கார்கள் மற்றும் பைக் இருந்ததாகவும், ஆந்திராவில் பல குற்றங்களைச் செய்துவிட்டு கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்து பின்னர், கோவா சூதாட்ட விடுதிகளில் அந்த பணத்தைச் செலவழித்து வந்ததாகவும், எச்.எஸ்.ஆர் லேஅவுட் போலீஸார் தெரிவித்ததாகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருடப்பட்ட வாகனங்கள் திருவண்ணாமலை, சென்னை, வேலூர், நாமக்கல், நாகப்பட்டினம் மற்றும் தமிழ்நாட்டின் பிற நகரங்களில் குறைந்த விலைக்கு விற்றிருக்கலாம் எனப் போலீஸார் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/news/crime/karnataka-man-arrested-the-person-who-stolen-car-by-youtube-tutorial
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக