மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநிலத்தின் பல பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக தினமும் 3 ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிராவில் தினமும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியிலும் கொரோவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது. இதனால் மும்பையில் பொதுமக்கள் கூடும் இடத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும், மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
`என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எனக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்தது. நானும் சோதனை செய்து கொண்டேன். இதில் கொரோனா இருந்தது தெரிய வந்தது. எனவே பொதுமக்கள் கவனகுறைவுடன் இல்லாமல் அனைவரும் கட்டாயம் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பொதுமக்கள் கூடும் இடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும்போதும், ஷாப்பிங் மால்களுக்கு வருபவர்களுக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டாலும் அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/corona-positive-for-aditya-thackeray-son-of-maharashtra-chief-minister
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக