Ad

வியாழன், 5 அக்டோபர், 2023

திருப்பூர்: `அழுகிய முட்டையில் ஆஃப்பாயில், கேக்'- ஆய்வுக்குச் சென்ற இடத்தில் அதிர்ந்துபோன அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, உணவகங்களில் பயன்படுத்தும் இறைச்சி உள்ளிட்ட பொருள்களின் நிலை குறித்து மாவட்டந்தோறும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில், குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் கடந்த இரண்டு வாரங்களாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் இறைச்சிக் கடைகளில் நடைபெற்ற ஆய்வில் சுமார் 30 கிலோ இறந்த கோழிகள், இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, உணவுப் பாதுகாப்பு அலுவலர் தங்கவேல் ஆகியோர் கூத்தம்பாளையம் சோழர் நகரில் முட்டை மொத்த விற்பனை செய்யும் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு

அதில், அங்குள்ள ஓர் வீட்டில் உடைந்த மற்றும் அழகிய நிலையில் சுமார் 2,000 முட்டைகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முட்டைகள் வைத்திருந்தவரிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரத்திலுள்ள உணவகங்களுக்கு ஆம்லெட், ஆஃப்பாயில் போடுவதற்கும், சிறிய பேக்கரிகளில் கேக் தயாரிக்கவும் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்துப் பேசிய உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, ``அழுகிய முட்டைகளை கோழிப்பண்ணையிலிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து, சாலையோரத்திலுள்ள சிறிய உணவகங்களுக்கு விற்பனை செய்து வந்திருக்கின்றனர். உணவகம் நடத்துவோரும் குறைந்த விலைக்குக் கிடைப்பதால், இவற்றை வாங்கிப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

அழுகிய முட்டை

முட்டை பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பண்ணையிலுள்ள உடைந்த முட்டைகளை தாங்களே பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டும். இதை மீறி உடைந்த மற்றும் அழுகிய நிலையிலுள்ள முட்டைகளை விற்பனை செய்தால் பண்ணை உரிமையாளர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உடைந்த முட்டைகளில் நோய்த்தொற்று பரப்பக்கூடிய கிருமிகள் பெருகுவதற்கு வாய்ப்புண்டு. இதைச் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/food/2000-rotten-eggs-destroyed-in-tirupur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக