Ad

புதன், 4 அக்டோபர், 2023

Sex Education: விற்பனைக்கு வரும் ஓடிஸ் நடித்த வீடு... என்ன ஸ்பெஷல் தெரியுமா?!

டீன் ஏஜ் காதல், காமம் பற்றிய கதைக்களத்தோடு காமெடியாக எடுக்கப்பட்ட சீரிஸ்தான் `Sex Education’. முதலில் இதன் தலைப்பு, வெளிப்படையான காட்சிகளுக்காக எதிர்ப்பை பெற்றாலும் கூடிய விரைவிலேயே பலரையும் கவர்ந்து ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தது. 

Sex Education

நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்த சீரிஸில் ஓடிஸ், மேவ், ரூபி என்ற கதாபாத்திரங்கள் பெருமளவில் கவனம் பெற்றன. இந்தக் கதைக்களத்தில் ஓடிஸ் தன் அம்மா ஜீனோடு வசிக்கும் வீடு அவ்வப்போது காட்டப்படும். அது மிகவும் அழகாகவும் ரம்யமாகவும் இயற்கை சூழலோடு ஒன்றியும் இருக்கும். 

இந்நிலையில், உலகம் முழுவதும் கவனம் பெற்ற `Sex Education’ சீரிஸில் நடித்த ஓடிஸ் வசிக்கும் வீடு, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வீட்டின் விலை 1.5 மில்லியன் பவுண்டுகள் முதல் 1.8 மில்லியன் பவுண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 15. 2 கோடி ரூபாய். 

அப்படியென்ன இந்த வீட்டில் ஸ்பெஷல் எனக் கேட்கலாம். சுற்றுலா தளமாகச் செயல்பட்டு வரும் இந்த வீடு, பரவலாக தி சாலட் (The Chalet) என்று அறியப்படுகிறது. பிரிட்டனின் வை நதிக்கரையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் எல்லையில் அமைந்துள்ளது. 

விடுமுறைக் காலங்களில் மீன் பிடித்து நேரத்தை செலவழிப்பதற்காக நார்வே ஸ்டைலில் மீன்பிடி லாட்ஜாக 1912-ல் இந்த வீடு கட்டப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டின் மலைப்பாதைகள் சீரமைக்கப்பட்டன. 

ஓடிஸ் நடித்த வீடு!

3,100 சதுர அடி பரப்பளவில் சுற்றிலும் பசுமையான நிலப் பரப்புடன் காட்சியளிக்கிறது. வீட்டில் மூன்று மாடிகள், ஐந்து படுக்கையறைகள் மற்றும் மூன்று குளியலறைகள் உள்ளன. கூடுதலாக ஒரு பழத்தோட்டம், சம்மர் ஹவுஸ், இரண்டு கிரீன்ஹவுஸும் இருக்கிறது. இந்த வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தேவாலயம் ஒன்றும் இருக்கிறது.   

இந்த வீட்டை வாங்குவதற்குப் பலரும் போட்டிப் போட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



source https://www.vikatan.com/business/companies/otis-house-in-sex-education-is-on-sale

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக