Ad

திங்கள், 23 அக்டோபர், 2023

லட்ச ரூபாய் பரிசுடன், ‘சமையல் சூப்பர் ஸ்டார்’ பட்டம்! - நாங்க ரெடி, நீங்க ரெடியா?

சமையல்... நம் எல்லாருடைய வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்த ஒரு கலை. ஆண், பெண் பேதமெல்லாம் சமையலுக்குக் கிடையாது. இந்தக் கலையில் ஆர்வம்கொண்ட யார் வேண்டுமானாலும் மணக்க மணக்க, ருசிக்க ருசிக்க சமைக்கலாம்.

சமைக்கவும் சாப்பிடவும் உங்களுக்குப் பிடிக்குமா? அவள் விகடன் நடத்தும் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டியில் கலந்துகொள்ள சரியான நபர் நீங்கதான். தமிழகம் முழுக்க

11 இடங்களில் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி நடைபெறவுள்ளது. மெகா இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும்.

தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா இந்நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்க உள்ளார். இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருள்கள் காத்திருக்கின்றன. 18 முதல் 60 வயதுக்குப்பட்ட அனைத்துப் பாலினத்தவரும் போட்டியில் பங்கேற்கலாம்.

எங்கு... எப்போது?

மதுரையில் அக்டோபர் 28-ம் தேதி (சனிக்கிழமை) போட்டி நடைபெறவுள்ளது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தேனியைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

திருச்சியில் அக்டோபர் 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போட்டி நடை பெறும். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

திருநெல்வேலியில் நவம்பர் 4-ம் தேதி (சனிக்கிழமை) போட்டி நடைபெறும். திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் தென்காசியைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். ‘சமையல் சூப்பர் ஸ்டார் பட்டம்’ வெல்ல நீங்க ரெடியா?

வாருங்கள்... களத்தில் சந்திப்போம்!

குறிப்பு: போட்டி முன்பதிவு, விதி முறைகள், நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விவர மாகத் தெரிந்துகொள்ள அருகே கொடுக்கப்பட்டிருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு: வாட்ஸ்அப் 9790990404



source https://www.vikatan.com/editorial/samaiyal-super-star-contest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக