Ad

வெள்ளி, 20 அக்டோபர், 2023

`பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்’ - தமிழகத்தின் 7 மாவட்டங்களில் தொடக்கம்..!

கைத்திறக் கலைஞர்கள் மற்றும் கைகளால் தங்கள் பொருளை தயாரிக்கும் தொழிலாளிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப் பட்ட திட்டம்தான் விஸ்வகர்மா. இந்தத் திட்டத்தின்மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், அவர் தங்கள் பொருள்களை சந்தைப்படுத்தவும், பிராண்டிங் மற்றும் இ-காமர்ஸ் போன்ற நடவடிக்கைகளுக்கும் அரசு தரப்பில் ஆதரவு அளிக்கப்படும்.

கைவினை

இந்நிலையில், இந்த விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் பலன் பெற தமிழகத்தைச் சேர்ந்த 9,246 பயனாளிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 17.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3,676 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1,025 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,506 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 896 பேரும் பதிவு செய்துள்ளனர். இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 187 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 895 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1,061 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இத்திட்டத்தில் பயனடைய தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/schemes-and-services/prime-ministers-vishwakarma-scheme-launched-in-7-districts-of-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக