Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

சைக்கிளில் சென்ற மாணவியின் துப்பட்டாவை இழுத்த இளைஞர்கள்... கீழே விழுந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

சாலையில் நடந்து செல்லும் போது, அல்லது சைக்கிளில் செல்லும்போது பெண்களை கிண்டல் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. அது போன்ற செயல்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அது போன்ற ஒரு விபரீதம் நடந்திருக்கிறது.

அம்பேத்கர் நகர் மாவட்டத்திலுள்ள ஹன்ஸ்வார் என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்தது. 17 வயது மாணவி ஒருவர் தனது தோழியுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்நேரம் அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் அம்மாணவியை கிண்டல் செய்து கொண்டே வந்தனர். அந்நேரம் அவர்கள் மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்தனர். இதனால் நிலை தடுமாறி அம்மாணவி சாலையில் விழுந்தார்.

மாணவி சாலையில் விழுந்தபோது அவர்மீது மற்றொரு பைக் மோதியது. இதில் மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். சாலையில் நடந்த இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஷோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் பைசல், சபாஷ், அர்பாஷ் ஆகிய மூன்று பேரை அடையாளம் கண்டு அவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து போலீஸ் கண்காணிப்பாளர் அஜித் குமார், ``குற்றவாளிகள் மூன்று பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அப்போது குற்றவாளிகள் ஒரு கான்ஸ்டபிள் துப்பாக்கியை பிடுங்கிக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. குற்றவாளிகளும் திரும்ப சுட்டனர். இச்சம்பவத்தில் குற்றவாளிகள் மூன்று பேரும் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



source https://www.vikatan.com/crime/accidents/bike-runs-over-girl-after-2-men-pull-her-dupatta-in-uttar-pradesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக