Ad

வியாழன், 6 ஏப்ரல், 2023

`யாரு சாமி நீ?!’ - மீம் முதல் ட்விட்டர் வரை... டோஜ் நாய் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! | #Visual Story

நீல நிற பறவைக்கு மாற்றாக டோஜ்காயின் (Dogecoin) நாய் இமேஜை ட்விட்டரின் லோகோவாக மாற்றியிருக்கிறார், எலான் மஸ்க்.

இந்த நாயின் படம் இவ்வளவு பிரபலமாக அறியப்படுவதற்கு பின்னால், பல சுவாரஸ்ய காரணங்கள் உள்ளன.

ஜப்பானின் கிண்டர்கார்டன் ஆசிரியையான அட்சுகோ சாடோ என்பவர் வேட்டை நாயினமான Shiba Inu இன நாயைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். இதற்கு கபோசு (Kabosu) எனப் பெயரிட்டார்.

கபோசு நாயின் புகைப்படங்களைத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அது கேமராவை நேருக்கு நேராகப் பார்க்கும் ஒரு புகைப்படம் வைரலாக, மற்றவை வரலாறு. எந்தவொரு மீம் கன்டென்ட்க்கும் பட்டெனப் பொருந்திவிடும் முகம் தான் கபோசுவினுடையது.

கபோசுவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி டோஜ் மீம்கள் (Doge Meme) 2012-ல் வலம்வரத் தொடங்கின. அவை 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் அபாரமான புகழை அடைந்தன.

அதன் பின் இந்த நாயினங்களை பலரும் டோஜ் என்றே அழைக்கத் தொடங்கினர். டோஜ் மீம்கள் சட்டைகளிலும், காபி கோப்பைகளிலும் அச்சடிக்கப்பட்டன.

2013-ல் பில்லி மார்கஸ் மற்றும் ஜாக்சன் பால்மர் என்ற இரண்டு சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் டோஜ்காயினை (க்ரிப்டோகாயின்) உருவாக்கினர். 

அமெரிக்க டாலர்

எட்டு வருடங்களுக்குப் பின், இந்த காயினில் பலரும் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். 2021 மே 5ம் தேதி டோஜ்காயின் 85,314,347,523 அமெரிக்க டாலர் சந்தை மூலதனத்தை (market capitalization) எட்டியது.

டோஜ் நாய் கபோசு இன்னும் உயிரோடு இருக்கிறது. இந்த நாய் 2005 நவம்பர் 2-ம் தேதி பிறந்தது. 

இந்த டோஜ் இன நாயினங்கள் ஜப்பானில் மிகவும் பிரபலம். ஏனெனில் ஹச்சிகோ (Hachiko) என்ற இவ்வின நாய் விசுவாசத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 

1920களில் ஹச்சிக்கோ என்ற டோஜ் இன நாய், தன்னுடைய உரிமையாளரை வேலை முடிந்தவுடன் அழைத்து வருவதற்காக ஷிபுயா நிலையத்திற்கு (Shibuya Station) தினசரி செல்லும் வழக்கத்தினால் பிரபலமானது.  

தன் உரிமையாளர் எதிர்பாராத விதமாக இறந்துபோக, ஹச்சிக்கோ 10 ஆண்டுகளாக தினமும் அந்த இடத்திற்குச் சென்றுள்ளது. தான் இறக்கும் வரை இதைச் செய்துள்ளது.

ஹச்சிக்கோவுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், நினைவுகூரும் விதமாகவும்  ஷிபுயா நிலையத்தில் ஹச்சிக்கோ உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 



source https://www.vikatan.com/ampstories/trending/viral/interesting-facts-about-doge-dog-visual-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக