Ad

திங்கள், 4 ஜூலை, 2022

``முர்மு ரப்பர் ஸ்டாம்ப்பாகச் செயல்பட மாட்டார் என்று உறுதியளிக்கவேண்டும்!" - யஷ்வந்த் சின்ஹா

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக ஆளும் அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இரு தலைவர்களும் பல மாநிலங்களுக்குச் சென்று தங்கள் கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு கோரிவருகின்றனர். பா.ஜ.க-வினர், யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றால் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆகத்தான் இருப்பார் என விமர்சித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்கள்

இந்த நிலையில், பா.ஜ.க-வின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும்விதமாக யஷ்வந்த் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், ``நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ.க தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றிபெற்றால், ரப்பர் ஸ்டாம்ப்பாகச் செயல்பட மாட்டார் என்ற உறுதிமொழியை பா.ஜ.க அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைத்து இந்தியர்களின் சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த, ராஷ்டிரபதி மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும்.

நான் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்ப்பாக இல்லாமல் அரசியலமைப்பின் ‘பாரபட்சமற்ற பாதுகாவலராக’ இருப்பேன். பா.ஜ.க-வின் வேட்பாளரையும் அதே உறுதிமொழியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்



source https://www.vikatan.com/government-and-politics/politics/yashwant-sinhas-request-to-bjp-presidential-candidate-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக