மயிலாடுதுறையில் ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கத்தினர் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைகீழாக நின்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டனக் குரல் எழுப்பினர்.
மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் சங்கத்தினர் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலையத்துக்கு முன்பு தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழன் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ரயில் பயணிகள் சங்கம், மயிலாடுதுறை வர்த்தக சங்கம், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில்,
1. 10 ஆண்டுகளாக இணைக்கப்படாத திருவாரூர் அகல ரயில் பாதையை மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் அனைத்து வழித்தடங்களுடன் இணைத்திட வேண்டும்.
2. மயிலாடுதுறை - திருச்சி விரைவு வண்டியை சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும்.
3. மயிலாடுதுறை - திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கும் முடிவைக் கைவிட்டு, திருநெல்வேலி வரை இயக்க வேண்டும்.
4. மயிலாடுதுறை - பெங்களூரு ரயிலை மீண்டும் உடனே இயக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
source https://www.vikatan.com/government-and-politics/protest/train-passengers-union-protest-in-mayiladuthurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக