Ad

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

`` நாங்கள் படித்தவர்கள்" - திருமாவளவனுக்கு ஆதரவாக பரவும் ட்ரெண்ட்

அரக்கோணம் அருகே சோகனூரில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 தலித் இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது. காவல்துறையினர் இந்த குற்றச் செயலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்திருக்கின்றனர்.

அர்ஜுனன், சூர்யா

இந்த படுகொலை சம்பவம், தேர்தலின் போது ஏற்பட்ட தகராறு காரணமாகவே நடந்திருப்பதாகவும், சாதியக் கொலை எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். தி.மு.க தலைவர் ஸ்டாலினும் இந்த சம்பவத்தை சாதியக் கொலை என குறிப்பிட்டு கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் மற்றொருபுறம், இது குடிபோதையில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் ஏற்பட்ட கொலை என்று புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவிக்கிறார். நேரில் சென்று விசாரித்த அவர் இது அரசியலுக்காகவோ, சாதிக்காகவோ நடந்த கொலை அல்ல என்று அவர் திட்டவட்டமாக மறுக்கிறார்.

பூவை ஜெகன்மூர்த்தி

இந்நிலையில், திருமாவளவன் சோகனூருக்கு நேரடியாகச் சென்று பலியான இளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அங்கிருக்கும் மக்களிடம் நடந்தது குறித்து விசாரித்தார். இந்த பிரச்னையை போராட்டம் மூலம் எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினரிடம் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், வீடியோ வெளியிட்டிருக்கு பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ்,`` இந்தக் கொலை சம்பவம் குடி போதையில் நடந்தது. சாதிய மோதல் காரணமில்லை. திருமாவளவன் போன்றவர்கள் பொய் தகவலை பரப்புகின்றனர். படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

திருமாவளவன்

அன்புமணியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வககையிலும், திருமாவளவனுக்கு ஆதரவு தரும் வகையிலும், சமூக வலைதளங்களில் #MyLeaderThiruma என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதில், ``நாங்கள் படித்தவர்கள்’’ என்று கூறி தாங்கள் வாங்கிய பட்டங்களைக் குறிப்பிட்டு, திருமாவளவனை ஆதரிக்கிறோம் என்று பதிவிட்டு வருகின்றனர். அவற்றுள் சில ட்வீட்கள் இங்கே.



source https://www.vikatan.com/government-and-politics/politics/my-leader-thirumavalavan-hastag-trends-in-social-media

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக