Ad

புதன், 28 ஏப்ரல், 2021

`24 மணி நேரத்தில் 3,645 மரணங்கள்; இதுவரை 15 கோடி மக்களுக்கு தடுப்பூசி!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்...!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,83,76,524 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,645. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,04,832-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,50,86,878 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 30,84,814 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,69,507 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 15,00,20,648 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்?!

தலைமை செயலகம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். நேற்றைய தினம், தலைமைச் செயலாளர் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்திய குறிப்பிடதக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/general-news/29-04-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக