Ad

திங்கள், 22 மார்ச், 2021

சென்னை: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மனைவியின் நிர்வாண வீடியோ - மூன்று திருமணம் செய்த இன்ஜினியர் கைது!

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கண்ணீர் மல்க புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் ஆஸ்திரேலியாவில் குடியிருந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்திவருகிறேன். எனக்கும் சென்னை தாம்பரம் சானடோரியத்தைச் சேர்ந்த சபீக் அகமது என்பவருக்கும் 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பிறகு நானும் சபீக் அகமதும் சென்னையில் குடியிருந்தோம். அப்போது நான் கர்ப்பம் அடைந்தேன். என்னை கட்டாயப்படுத்தி கருவை கலைத்துவிட்டார்.

திருமணம்

அதன்பிறகு எனக்கும் சபீக் அகமதுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால் சபீக் அகமது மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது புகாரை வாபஸ் வாங்கும்படி சபீக் அகமது என்னை மிரட்டிவருகிறார். நானும் சபீக் அகமதுவும் சந்தோஷமாக இருந்தபோது எனக்குத் தெரியாமல் எடுத்த போட்டோஸ், வீடியோக்களை வாட்ஸ்அப் டிபி மற்றும் ஸ்டேட்ஸில் வைத்திருக்கிறார். எனவே சபீக் அகமது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Also Read: சென்னை: வெளியில் பூட்டு; உள்ளே ஆபாச நடனம் - சுவர் ஏறிக் குதித்து நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் வித்யா ஜெயந்த் குல்கர்னிக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் வேல்முருகன், இன்ஸ்பெக்டர் உமாதேவி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர் சபீக் அகமது. ஆனால் இவரின் குடும்பம் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் நீண்ட காலமாக வசித்து வருகிறது. சபீக் அகமதுவின் தந்தை தோல் வியாபாரம் செய்து வருகிறார். சபீக் அமகது இன்ஜினீயரிங் படித்து விட்டு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஆபாச வீடியோஸ்

இவருக்கும் கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் முதலில் திருமணம் நடந்திருக்கிறது. அந்தப் பெண்ணுக்கும் சபீக் அகமதுவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். அதுதொடர்பாக வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அதன்பிறகு 2-வதாக சபீக் அமகது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். அவருடனும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். அதன்பிறகுதான் ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து, ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணை சபீக் அகமது மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார். அவருடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்திருக்கின்றனர்.

இந்தச் சமயத்தில்தான் மூன்றாவது மனைவியுடன் படுக்கையறையில் சபீக் அகமது நெருக்கமாக இருந்தபோது ரகசியமாக கேமரா மற்றும் செல்போன் மூலம் வீடியோ, போட்டோஸ்களை எடுத்திருக்கிறார். மூன்றாவது மனைவி தன்மீது புகாரளித்ததும் அவரை மிரட்டுவதற்காக மனைவியின் நிர்வாண வீடியோக்களையும் போட்டோக்களையும் தன்னுடைய வாட்ஸ்அப் டிபி மற்றும் ஸ்டேட்ஸில் வைத்திருக்கிறார். ஆனால் அதை மனைவியைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. அந்த வீடியோக்கள், புகைப்படங்களைப் ஆஸ்திரேலியாவில் இருந்து பார்த்த மூன்றாவது மனைவி அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதை உடனடியாக எடுக்கும்படி சபீக்கிடம் அவர் கூறியிருக்கிறார்.

கைது

அதற்கு தன் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கினால் மட்டுமே வீடியோக்கள், புகைப்படங்களை எடுப்பேன் என சபீக் மிரட்டியிருக்கிறார். அதன்பிறகுதான் மத்திய குற்றப்பிரிவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் புகாரளித்தார். இதையடுத்து சபீக் அகமதுவைக் கைது செய்து அவரின் செல்போன், லேப்டாப், கேமரா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்திருக்கிறோம். அதில் சபீக் அகமது திருமணம் செய்த பெண்களின் நிர்வாண போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தன. அதனால் அதை ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-it-engineer-for-posting-nude-videos-of-wife-in-whatsapp-status

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக