Ad

திங்கள், 26 செப்டம்பர், 2022

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 48 - பரிசு ரூ.5,000

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘‘இன்று வருடம் முழுவதும் ஆடைகள் வாங்குகிறோம். தீபாவளிக்கு மட்டுமே புத்தாடை வாங்கிக்கொடுக்கப்பட்ட காலத்தில், உங்களுக்கு மிகப் பிடித்ததாக அமைந்த ஒரு தீபாவளி ஆடை பற்றி...'' - ‘நச்’ சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

1. அல்லி மலரின் இன்னொரு பெயர் (4)

8. திமிங்கிலம், யானைக்கு இது மெதுவாகத் துடிக்கும். ரீங்காரச் சிட்டுக்கு இது வேகமாகத் துடிக்கும் (4)

12. பனிப்பிரதேசத்தில் வாழும் பறவைகளில் முக்கியமானது. (5)

வலமிருந்து இடம்

3. பாலைவனக் கப்பல். மனிதர்களின் வாகனம் (5)

5. மகாகவி (3)

7. வைரமுத்து எழுதிய `கருவாச்சி --------' (4)

10. நிறங்களில் ஒன்று (3)

14. இந்தக் காயை உணவில் பல விதங்களில் பயன்படுத்தலாம் (4)

மேலிருந்து கீழ்

1. கோபம் (5)

2. தோல் இசைக்கருவியில் ஒன்று (4)

3. உளவாளி (4)

8. ----க்கு மயங்காதவர் உண்டா? (2)

9. ராமனின் தம்பிகளில் ஒருவர் (4)

11. சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனம் (2)

கீழிருந்து மேல்

4. அனுமான் என்றால் இந்த உறுப்புதான் நினைவுக்கு வரும் (2)

6. நவமணிகளுள் ஒன்று (4)

7. வனம் (2)

12. இவர்கள் மூலம் குழந்தைகள் பிறக்கிறார்கள் (4)

13. வந்தியத்தேவனின் இணையர் (4)

14. வரவேற்புக்குப் பயன்படும் சிவப்புக் ------ (5)

சரியான விடையுடன்... கடைகள்/சூப்பர் மார்க்கெட்டுகள் என ஷாப்பிங் செல்லும்போது தரப்படும் பில்களை என்ன செய்வீர்கள்? - `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. து.உமாதேவி, சேலம்-14: கடையில் தரப்படும் பில்களை வீட்டுக்குக் கொண்டுவந்து, செலவுகளை எழுதும் டைரியில் குறித்து வைத்துவிட்டு பத்திரமாக அதில் வைப்பேன். வாங்கிய பொருள்களின் கவர் பிரிக்கும்வரை பில் தேவை. மற்றும் பொருள்கள் சரியாக இல்லாவிட்டால் மாற்றிக்கொள்ளவும் பில் தேவை.

2. பேபி சகிலா, சென்னை-33: ஷாப்பிங் செல்லும்போது கடைகளில் தரப்படும் பில்களில் உள்ளவை சில நாள்களில் அழிந்துவிடுவதால் உடனடியாக அதை மொபைலில் போட்டோ எடுத்துக்கொள்வேன். காரணம் பின்னாளில் நடப்பு விலையை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கு ஏற்றாற்போல பட்ஜெட் போட ஏதுவாக இருக்கும்.

3. பிரபா டாக்கர், ஹைதராபாத்-4: பில்களை வாங்கிக் கொண்டு அங்கேயே அமர்ந்து பொருள்களின் விலை சரியாக போடப்பட்டிருக்கிறதா, எந்தப் பொருளுக்கு எத்தனை தள்ளுபடி அளித்திருக்கிறார்கள், கூட்டுத்தொகை சரியாக இருக்கிறதா என்று பார்த்து அதிகமாகப் போட்டிருந்தால் சுட்டிக்காட்டி பணத்தைத் திரும்பப் பெறுவேன். இந்த அனுபவம் எனக்கு இரண்டு முறை நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது.

4. ரத்னா நாகராஜ், சென்னை-15: எந்த பில்லையும் தூக்கிப் போட மாட்டேன். சிறிய பில்களின் பின்புறம் என் போன் நம்பர், வீட்டு அட்ரஸ் கேட்பவர்களுக்கு, எழுதிக்கொடுக்க அல்லது அவர்களிடம் பெற பயன்படுத்துவேன். சமையலறை யில் தீர்ந்துவிடும் பொருள்களை குறித்துக்கொண்டு கடைகளுக்கு எடுத்துச் செல்லவும், கோயில்களில் தரும் விபூதி, குங்குமம் மடித்து வைத்துக்கொள்ளவும் பர்சில் போட்டு வைப்பேன். மருந்தகங்களில் தரும் பெரிய பில்லை நீரில் நனைத்து முகம் பார்க்கும் கண்ணாடி, பீரோ கண்ணாடி, சுவர் கடிகாரம் துடைக்கப் பயன்படுத்துவேன்.

5. மாயா சேகர், மும்பை: ஷாப்பிங் பில்களை சில நாள்களுக்கு வைத்துக்கொள்வது நல்லது. ஒரு முறை 100 கிராம் மளிகைப்பொருள் வாங்கியதற்கு 200 கிராமுக்கான விலை போடப்பட்டிருந்தது. விசாரித்ததில் தவறு நடந்துவிட்டது என்று 200 கிராம் பாக்கெட்டை வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள். மறுத்து 100 கிராம் மட்டும் போதுமென்று சொல்ல, பில்லை சரி செய்து கொடுத்தார்கள். தவறுகள் ஏற்படலாம். பொருள்கள் வாங்கி வந்தவுடன் பில்லுடன் ஒப்பிட்டு சரிபார்த்துக்கொள்ள தவறிப்போன/மாறிப்போன பொருள்களை மறுபடியும் பெற்றுக்கொள்ள பில் கட்டாயம் அவசியம்.

6. பி.ரமணி இளங்கோ, சேலம்-4: கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் தரப்படும் பில்லை பார்த்து பணம் கொடுப்பதோடு சரி... அதற்குப் பிறகு அந்த பில் தேவையற்றது என தூக்கிப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒருமுறை என் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்வீட் வாங்கி வந்தேன். மறுநாள் ஸ்வீட் பாக்ஸை திறந்து பார்த்தபோது பூசணம் பிடித்து இருந்தது. உடனே கடைக்குச் சென்று காண்பித் தேன். பில் இல்லாமல் மாற்றித் தர முடியாது என்று கூறிவிட்டனர். அன்று முதல் பில்லின் முக்கியத்துவத்தை உணர்ந்து பத்திரப் படுத்தி வைக்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறேன்.

7. பி.எஸ்.சாலினி, மதுரை-4: ஒவ்வொரு மாதமும் வரவு செலவு எழுதும் நோட்டில் அந்தந்த மாத பில்லை ஒட்டி விடுவேன். அடுத்த மாதம் என்னென்ன வாங்க வேண்டும் என்றும் ஒவ்வொரு பொருளின் விலையும் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும்.

8. சாந்தி ரவிக்குமார், சென்னை-74: சூப்பர் மார்க்கெட்டில் தரப்படும் பில்லை சில நாள்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்போம். இதன் பலனை சமீபத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்வால் உணர்ந்தோம். நாங்கள் வாங்கிய ஒரு பொருளுக்கு ரூபாய் 30 தள்ளுபடி என்று எழுதியிருந்தது. அதை இரண்டு நாள்கள் கழித்துதான் கவனித்தோம். பின்னர், பில்லையும் பொருளையும் கடைக்குச் சென்று காட்டியதும் ஒன்றும் சொல்லாமல் 30 ரூபாயை கையில் கொடுத்தார்கள்.

9. ஜி.வளர்மதி, கோயம்புத்தூர்-46: வாங்கிய பொருள்களும் அவற்றின் விலையும் சரியாகத்தான் இருக்கிறதா என்பதை சரி பார்ப்பேன். பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களில் தயார் செய்யப் பட்ட தேதியும் எக்ஸ்பைரி தேதியும் சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்ப்பேன். காலாவதியாகிய பொருள்கள் ஏதேனும் இருந்தால் பொருளையும் பில்லையும் எடுத்துச் சென்று கடைக் காரரை எச்சரித்துவிட்டு வருவேன்.

10. கே.ஆர்.சாந்தி, மதுரை-1: கடையில் தரும் பில்களை பத்திரப்படுத்தி வைப்பேன். ஒருமுறை 500 ரூபாய்க்கு ஹெட் போன் வாங்கினேன். ஆறு மாத கேரன்டியுடன். இரண்டு மாதங் களில் அந்த ஹெட் போனின் ஒரு சைடு மைக் கேட்காமல் போகவே, பத்திரப்படுத்தி வைத்திருந்த பில்லுடன் கடைக்குச் சென்று மாற்று ஹெட் போனை புதிதாகப் பெற்றுக்கொண்டேன்.



source https://www.vikatan.com/news/general-news/puthir-potti-48

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக