Ad

வியாழன், 22 செப்டம்பர், 2022

ICC T20 WC 2022: படைபலங்களுடன் தயாராக நிற்கும் அணிகளின் ஸ்குவாடுகளும் கவனிக்க வேண்டிய விஷயங்களும்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. அனைத்து அணிகளும் அந்த உலகக்கோப்பைக்கான தங்களின் அணியை அறிவித்துவிட்டு கடைசிக்கட்ட பரபரப்பில் போட்டிகளை ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் முக்கியமான அணிகளின் உலகக்கோப்பை ஸ்குவாடுகளையும் அவற்றில் கவனிக்க வேண்டிய ஒரு சில விஷயங்களைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
இந்தியா: உலகக்கோப்பை அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஷ்வின், சஹால், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ரிசர்வ் வீரர்கள்:

ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சஹார்.

கடந்த உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்குச் செல்லாமலேயே இந்திய அணி வெளியேறியிருந்தது. அந்த உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணியிலேயே எக்கச்சக்க மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. கேப்டன் ரோஹித்தும் பயிற்சியாளர் டிராவிட்டும் பல வீரர்களையும் முயன்று பார்த்து இந்த அணியில் செட்டில் ஆகியிருக்கின்றனர். இந்த அணி குறித்தும் சில கேள்விகள் இருக்கவே செய்கின்றன. விக்கெட் கீப்பர் யார், ஷமி அணியின் ப்ளூ பிரிண்ட்டிலேயே இல்லையெனில் எதற்காக ரிசர்வ் லிஸ்ட்டில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் போன்ற கேள்விகளுக்கான விடையை யாருமே சொல்லவில்லை. இந்தக் குறைகளைக் கடந்து இந்திய அணி சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

ஆஸ்திரேலியா: உலகக்கோப்பை அணி

ஆரோன் ஃபின்ச், ஆஸ்டன் அகர், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், ஹேசல்வுட், ஜோஸ் இங்லிஸ், மிட்செல் மார்ஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஷம்பா

வழக்கம்போல அதே வலிமையான ஆஸ்திரேலிய அணியாகத்தான் இப்போதைய அணியும் இருக்கிறது. நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற துடிப்போடு இருக்கிறது. சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட்டின் அறிமுகம் இரண்டு வருடங்களாகவே எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிமுகம் இந்தியாவிற்கு எதிரான தொடரில் நிகழ்ந்துவிட்டது. உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியிலுமே டிம் டேவிட் இடம்பெற்றிருக்கிறார்.

Australia Squad
நியூசிலாந்து: உலகக்கோப்பை அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுத்தி, இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்டின் கப்தில், ஃபெர்குசன், டெவான் கான்வே, மார்க் சாப்மன், மைக்கேல் ப்ரேஸ்வெல், ட்ரெண்ட் போல்ட், ஃபின் ஆலன்.

கடந்த உலகக்கோப்பையின் ரன்னர்- அப் ஆன நியூசிலாந்து அணி இந்த முறையும் வில்லியம்சன் தலைமையில் ஏறக்குறைய அதே அணியை களமிறக்கியிருக்கிறது. கடந்த வருட அணியிலிருந்து வெறும் மூன்றே மூன்று மாற்றங்களை மட்டுமே செய்திருக்கிறார்கள். ப்ரேஸ்வெல், ஃபெர்குசன், ஃபின் ஆலன் என அணிக்குள் புதிதாக வந்திருக்கும் மூவருமே வலு சேர்க்கக்கூடியவர்களே.

NZ
வெஸ்ட் இண்டீஸ்: உலகக்கோப்பை அணி:

நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், யானிக் காரியா, ஜான்சன் சார்லஸ், செல்டன் காட்ரெல், ஹெட்மயர், ஹோல்டர், அகீல் ஹூசைன், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், எவீன் லீவிஸ், கைல் மேயர்ஸ், ஓபட் மெக்காய், ரேமன் ரீஃபர், ஒடேன் ஸ்மித்.

டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி எப்போதுமே ஆபத்தானதுதான். இந்த முறை முதல் சுற்றான தகுதிச்சுற்றிலும் ஆடவிருக்கின்றன. அணியைப் பொறுத்தவரைக்கும் ரஸல் இல்லாதது ஒரு மிகப்பெரிய முடிவு. கடைசியாக 2016-ல் டி20யில் ஜான்சன் சார்லஸையும் சமீபத்தில் ஓடிஐ போட்டிகளில் அறிமுகமான யானிக் காரியாவையும் அணியில் எடுத்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

West Indies
இலங்கை: உலகக்கோப்பை அணி:

தசுன் சனாகா, குணதிலகா, நிஷாங்கா, குஷால் மெண்டீஸ், அசலாங்கா, பனுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மஹீஸ் தீக்சனா, வாண்டர்சே, சமீகா கருணாரத்னே, சமீரா, லஹிரூ குமாரா, மதுசங்கா, பிரமோத் மதுஷன்.

ரிசர்வ் வீரர்கள்:

அசேன் பண்டாரா, பிரவீன் ஜெயவிக்ரமா, தினேஷ் சண்டிமால், பினுரா ஃபெர்னாண்டோ, நுவனிது ஃபெர்னாண்டோ

Srilanka Squad
யாருமே எதிர்பார்த்திடாத வகையில் இலங்கை அணி சமீபத்தில் ஆசியக்கோப்பையை வென்றிருந்தது. ஆசியக்கோப்பையில் ஆடியதில் முக்கியமான வீரர்கள் அத்தனை பேருமே இந்த அணியிலும் இருக்கின்றனர். கூடுதலாக சமீரா போன்ற வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு வந்து இணையும்பட்சத்தில் இலங்கை வலுவான அணியாகவே இருக்கும். ஆயினும், அவர்கள் முதல் சுற்றான தகுதிச்சுற்று போட்டியில் ஆட வேண்டியிருப்பது அவர்களுக்கான கூடுதல் சவாலாக இருக்கும்.
இங்கிலாந்து: உலகக்கோப்பை அணி:

ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி ப்ரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், லிவிங்ஸ்டன், மலான், அடில் ரஷீத், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட், அலெக்ஸ் ஹேல்ஸ். ரிசர்வ் வீரர்கள்: டாசன், ரிச்சர்ட் க்ளீசன், டைமல் மில்ஸ்

கடந்த உலகக்கோப்பையில் அதிக வெற்றி வாய்ப்புள்ள அணியாகக் கருதப்பட்டு அரையிறுதியோடு வெளியேறிய அணி இங்கிலாந்து. இந்த முறை இயான் மோர்கன் இல்லை. பட்லர் கேப்டனாகியிருக்கிறார். காயம் காரணமாக அதிரடி ஆட்டக்காரரான பேர்ஸ்ட்டோ அணியில் இடம்பெறவில்லை. கடந்த உலகக்கோப்பையில் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மில்ஸ் இந்த முறை ரிசர்வ் லிஸ்ட்டிலேயே இருக்கிறார்.

ENG
பாகிஸ்தான்: உலகக்கோப்பை அணி:

பாபர் அசாம், ஷதாப் கான், ஆசிஃப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃதிகார் அஹமது, குஷ்தில் ஷா, ஹஸ்னைன், முகமது நவாஷ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான் காதிர்.

ரிசர்வ் வீரர்கள்:. ஃபகர் ஷமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஷ் தஹானி

க்ளாஸாக டி20 யை அணுகும் பாகிஸ்தான் அணி கடந்த முறை அரையிறுதியோடு வெளியேறியிருந்தது. இந்த முறையும் சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் பாணியிலான அணியை அறிவித்திருக்கிறது. ஷாகீன் ஷா அஃப்ரிடி காயத்திலிருந்து மீண்டு உலகக்கோப்பைக்கு வந்துவிடுவார். ஹைதர் அலி போன்ற வீரர்களும் அணிக்கு பலமே சேர்க்கின்றனர்.

Pakistan Squad
தென்னாப்பிரிக்கா: உலகக்கோப்பை அணி
பவுமா (கேப்டன்), டீகாக், ஹென்றி க்ளாசென், ரீசா ஹென்றிக்ஸ், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரன், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, நோர்கியா, வேய்ன் பர்னல், ப்ரெட்டோரியஸ், ரபாடா, ரோசோவ், ஷம்சி, ஸ்டப்ஸ்

கடந்த உலகக்கோப்பையில் பெரிய எதிர்பார்ப்புகளின்றி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி நன்றாகவே ஆடியிருந்தது. அரையிறுதிக்குத் தகுதிப்பெறாவிடிலும் மெச்சத்தகுந்த பெர்ஃபார்மென்ஸையே கொடுத்திருந்தது. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இதே உலகக்கோப்பை அணிதான் இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஆடவிருக்கிறது.

SA Squad
வங்கதேசம்: உலகக்கோப்பை அணி:

ஷகிப்-அல்-ஹசன், ஷபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன், ஆஃபிப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், லிட்டன் தாஸ், யாசீர் அலி, நூரூல் ஹசன், முஷ்டஃபிசுர் ரஹ்மான், சைஃபுதீன், டஸ்கின் அஹமது, எபாடட் ஹூசைன், ஹசன் மகமத், நஜ்முல் ஹூசைன், நஸூம் அஹமது. ரிசர்வ் வீரர்கள்: சொரிஃபுல் இஸ்லாம், ஷாக் மெகதி ஹசன், ரிஷாத் ஹூசைன், சவுமியா சர்கார்.

ஆசியக்கோப்பையில் பலத்த அடி வாங்கிய வங்கதேச அணி உலகக்கோப்பையில் கொஞ்சம் டீசன்ட்டான பெர்ஃபார்மென்ஸையாவது கொடுக்கும் முயற்சியோடு அறிவித்திருக்கும் அணி இது. முன்னாள் கேப்டன் மகமத்துல்லா அணியிலிருந்து ட்ராப் செய்யப்பட்டிருப்பது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.

Bangladesh Squad
ஆப்கானிஸ்தான்: உலகக்கோப்பை அணி:
Afghanistan Squad

முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா ஷத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஷ், ஒமர்சாய், ரசூலி, ஃபரீத் அஹமது மாலிக், ஃபரூகி, ஹஷ்ரத்துல்லா சேஷாய், இப்ராஹிம் ஷத்ரான், முஜீப்-உர்-ரஹ்மான், நவீன்-உல்-ஹக், கெய்ஸ் அஹமது, ரஷீத் கான், சலீம் சஃபீ, உஸ்மான் கானி.

ரிசர்வ் வீரர்கள்:

அஃப்சர் சேஷாய், ஷராஃபுதின் அஷ்ரஃப், ரஹ்மத் ஷா, குல்பதீன் நயீப்.

கத்துக்குட்டி அணி என்கிற அடையாளத்தை கடந்து வந்துவிட்டது ஆப்கானிஸ்தான். வெற்றியோ தோல்வியோ ஆடுகின்ற ஒவ்வொரு போட்டியிலுமே எதிரணியைத் திணறடிக்கிறது. வழக்கம்போல இந்த முறையும் பெரிய இமேஜ் இல்லாமல் இறங்கி ஆப்கானிஸ்தான் கலக்கும் என எதிர்பார்க்கலாம்.



source https://sports.vikatan.com/cricket/an-update-on-squads-of-various-countries-for-upcoming-t20-worldcup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக