Ad

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

ராணி எலிசபெத் உடல் இன்று அடக்கம்... லண்டனில் உலக தலைவர்கள்!

இங்கிலாந்து வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்ட இவர் தன்னுடைய 96-வது வயதில் காலமானார். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலக நாடுகளின் மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என 500 தலைவர்களும், மிக முக்கிய பிரமுகர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இறுதி சடங்குக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட உலக தலைவர்கள் லண்டன் நகரில் நேற்று முன்தினம் முதல் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு பக்கிங்ஹம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் நேற்று வரவேற்பளித்தார். அதைத் தொடர்ந்து, அவரின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதில், ராணிக்கு செய்யவேண்டிய அரச சடங்குகளுக்கு பிறகு, அரச குடும்பம் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திலிருந்து புறப்படும்.

ராணி இரண்டாம் எலிசபெத்

அதைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலுமிருந்து வரும் உலகத் தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இறுதிப் பிரியாவிடை வழங்குவார்கள். அதன் பிறகு எலிசபெத் மகாராணி இளவரசர் பிலிப்புடன் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவார். இளவரசர் பிலிப் வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் கீழ் உள்ள ராயல் வால்ட்டில் ஏப்ரல் 2021-ல் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

எலிசபெத் மகாராணி | Queen Elizabeth II

ராணியின் பெற்றோரும் விண்ட்சர் கோட்டையின் மைதானத்தில் உள்ள சிறிய தேவாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டனர். 1649 -ல் சார்லஸ் I மற்றும் 1547 இல் காலமான ஹென்றி VIII உட்பட அரச குடும்பத்தினர் பெரும்பாலோர் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/international/queen-elizabeth-funeral-today-afternoon-burial

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக