கச்சேரியா, பூஜையா..?
சிங்கீதம் என்பது பல சிற்றாறுகளால் ஜீவனுாட்டப்படும் நதியைப் போன்றது தான். நதி நெடுங்காலமாக ஒடிக் கொண்டிருந்தாலும் அதன் நீர் எப்போதும் புதிதாகவே இருக்கும். நமது சங்கீதமும் இதே போலத்தான். கூர்ந்து கவனித்தால் வெவ்வேறு தலைமுறைகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் நமக்குத் தென்படும். சில நேரங்களில், போதுமான அளவு புதுத் தண்ணீர் கலக்காமல் போவதால், நதியில் தேக்கம் ஏற்படுவதுண்டு. அந்தத் தேக்கத்தையே புனிதமென்று போற்றிக் கொண்டாடும் நிலைமையும் ஏற்படுகிறது. . இது சங்கீதத்துக்கும் பொருந்தும்.
கர்நாடக இசையைப் பொறுத்தவரையில் இப்போது ஒரு தேக்க காலம் தான் நிலவுகிறது. சம்பிரதாயம் என்று எதையோ தவறாகப் புரிந்து கொண்டு ஆத்மாவுக்கோ, அழகுக்கோ இடமில்லாதபடி, கச்சேரிகளை "ஸ்டீரியோடைப்"பாக ஆக்கி விட்டார்கள். சில 'பாட்டர்ன்"களைப் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு, அவற்றின் பொருத்தத்தையோ உள்ளுணர்வையோ புரிந்து கொள்ளாமலே காலம் கடத்தி வருகிறார்கள் நமது வித்வான்கள்.
உதாரணமாகச் சொல்லப் போனால், நம்முடைய இசை, பக்தியில் தோய்ந்தது என்றும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுவதற்கென்றே உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறி வருகிறோம். எத்தக் கச்சேரியும் முதலில் ஒரு வர்ணத்துடன் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து விநாயகர் பேரில் ஒரு பிரார்த்தனை கிருதி... அடுத்து, சரஸ்வதி பேரில்... தொடர்த்து வெவ்வேறு தெய்வங்களைப் பற்றிய சாகித்யங்கள், கிருதிகள்.. இந்த 'பாட்டர்'னில் உள்ள பேத்தலை யாராவது உணர்ந்திருக்கிறார்களா? கிடையாது.
முதல் முதல் தொடங்கப்படும் வர்ணத்தின் உட்பொருள் என்ன? விரகதாபத்தினால் தவிக்கும் ஒரு பெண்னின் மன உணர்ச்சிகளை அப்பட்டமாக வெளிப்படுத்துவதுதானே வர்ணம் என்பது? அத்துடன், விநாயகருக்கான பிரார்த்தகனயை எப்படி ஓட்ட முடியும்? இன்னென்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்: கச்சேரி என்பது ஒரு பொழுதுபோக்குத் தானே தவிர, மேடையில் நிகழ்த்தப்படும் பூஜை அல்ல. கர்நாடக இசையில் பக்தியும் மதமும் தான் தற்சமயம் அதிகமாக இருக்கிறது.
இது காலத்துக்கு ஒத்து வராத ஒன்று. கீர்த்தனைகள் போன்றவையெல்லாம் வேறு ஒரு தலைமுறையைச் சேர்த்தவர்களால் முற்றிலும், மாறுபட்ட சமூகச் சூழ்நிலைகளில் மக்களின் வாழ்வில் மதமே முக்கியமாக இருந்து வந்த காலகட்டத்தில் - இயற்றப்பட்டவை.
ஆனால், நமது சமுதாயம் இப்போது வெகுவாக மாறிவிட்டது. மதம் என்பது பிரதானமாக இல்லாமல் அதுவும் பழக்கத்தினால் படிந்த ஒன்று என்றாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சங்கீதத்தின் பணியும் பங்கும் என்ன என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை வெறும் ஆன்மிகப் பயிற்சியாகவோ அனுபவமாகவோ கருதாமல், ஒரு கலையாகக் கருத வேண்டும்.
இசையின் அழகைப் பல்வேறு பரிமானங்களில் பருகுவதற்காகவே ஜனங்கள் கச்சேரி கேட்க வருகிருர்களே தவிர பழைய கிருதிகளிலும் கீர்த்தனங்களிலும் உள்ள புலம்பல்களிலும், வேண்டு கோள்களிலும், மாரடிப்புகளிலும் பங்கு பெறுவதற்காக அல்ல. ரசிகர்களை மகிவிப்பதுதான் வித்வானின் நோக்கமாஇருக்க வேண்டுமே தவிர, மோட்சத்துக்கு வழிகாட்டுவதல்ல...
தற்கால வாழ்க்கையையொட்டி சாகித்யங்களை இயற்ற, வேண்டும். புராணங்களை ஒதுக்கி விட்டு, வேறு விதமான 'சப்ஜெக்ட்'களை மையமாக கேட்டதும் என்ற நூலிலிருந்து வைத்து, சாகித்யங்கள் இயற்ற நான் துவங்கி விட்டேன். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய் மொழிகளைப் பேசும் மக்களின் இயல்புகளையும், அந்தந்த மாநிலத்தின் இயற்கை அழகையும், இவையெல்லாம் இணந்தால் தென்னகத்தில் என்னென்ன அற்புதங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது என்பதையும் வைத்து நானே சொந்த சாகித்யம் ஒன்று இயற்றி இப்போது பாடி வருகிறேன்... அந்த சாகித்யத்துக்கு அத்தனை பிரமாதமான 'ரிசப்ஷன்'! மேலும் இதுபோல பல சாகித்யங்களை உருவாக்க வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். அதற்காகப் பலரது உதவியையும் நாடுகிறேன்.
- 'டெக்கான் ஹெரால்ட்' இதழில் வெளியான ஒரு பேட்டியில் பாலமுரளிகிருஷ்ணா கூறியது.
(12.12.1982 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
source https://www.vikatan.com/government-and-politics/cinema/singer-balamurali-krishna-interview-to-a-english-magazine-in-1982
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக