Ad

திங்கள், 12 ஏப்ரல், 2021

கொரோனா: `புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்!’ - 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைத்த மகாராஷ்டிரா

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகப்படியான கொரோனா தொற்று இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏற்கனவே மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குறையவில்லை. இதையடுத்து மகாராஷ்டிரா அரசு 1-9, 11ம் வகுப்பு மாணவர்களை தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தவேண்டும் என்று பெற்றோர்கள் போராடி வருகின்றனர். ஆனால் திட்டமிட்ட படி நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்று மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. ஆனால் தற்போது தேர்வு நடைபெறும் தேதியை மாநில அரசு தள்ளி வைத்துள்ளது.இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு ஜூன் மற்றும் மே மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது தேர்வு நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை.

மீண்டும் கொரோனா தடுப்பூசி

தொழில் நுட்ப தேர்வுகளுக்கான நுழைவுத்தேர்வுகள் நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு 12ம் வகுப்புக்கு மே இறுதியில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 10ம் வகுப்புக்கு தேர்வு நடைபெறும். அரசு சுகாதார நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா கடை உரிமையாளர்கள் சங்கம் புதிய லாக்டெளன் அமல்படுத்துவதற்கு முன்பு அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதன் படி கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்க அனுமதிக்கலாம் என்றும், அத்தியாவசிய பயன்பாட்டுக்கடைகள் திறந்திருப்பது போன்று ஆன்லைன் வர்த்தகத்திலும் அத்தியாவசியப்பொருட்களை மட்டுமே டெலிவரி செய்ய அனுமதிக்கவேண்டும் என்றும் பொது முடக்கம் என்பது வியாபாரிகளின் முதுகெலும்பை உடைப்பதாக இருக்கக்கூடாது.

முதல்வர் உத்தவ் தாக்கரே

அதோடு பொது முடக்கத்திற்கு முன்பு வியாபாரிகளின் சம்பள பிரச்னை, மின் கட்டணம், வரி, கடன் போன்ற அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கொடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே மும்பையில் மீண்டும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருக்கிறது. மும்பையில் மட்டும் தினமும் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/corona-threat-maharashtra-government-postpones-class-10-12-exams

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக