Ad

வெள்ளி, 8 டிசம்பர், 2023

``ஜான்சன் பேபி பவுடர் தினமும் சாப்பிடுறேன்; எந்தப் பிரச்னையும் வரலை" - திகிலூட்டும் இளம்பெண்!

உணவுகளைத் தாண்டி சாப்பிடக் கூடாத சிலவற்றை உண்ணும் விநோதமான பழக்கம் சிலருக்கு இருக்கும். பல்பம், மணல், சாக்பீஸ், சுண்ணாம்பு என வித்தியாசமான பொருள்களை சிலர் சாப்பிடுவதுண்டு.

அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது டிரேகா மார்ட்டின் என்ற பெண் சமீபத்தில் ஜான்சன் பேபி பவுடரை உண்ணும் விசித்திரமான போதைக்கு அடிமையானதாகக் கூறியுள்ளார்.

ஜான்சனின் `Aloe & Vitamin E' 623 கிராம் பாட்டில் பவுடரை தினமும் சாப்பிடுவதாகக் கூறியுள்ளார். இதற்காக இந்த ஆண்டு மட்டும் சுமார் 4,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 3,33,380 ரூபாய்) செலவு செய்துள்ளார்.

தோலுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பவுடர் என நிறுவனம் குறிப்பிட்டுள்ள போதும், இவர் அதைத் தின்பதைத் தொடர்கிறார். இந்தப் பழக்கத்தால் இதுவரையில் எந்த விதமான உடல்நல மற்றும் செரிமான பிரச்னைகளுக்கும் உள்ளாகவில்லை என்று கூறியுள்ளார்.

பெயின்ட் சில்லுகள், அழுக்கு, காகிதம் அல்லது முடி போன்ற உணவு அல்லாத பொருள்களை விரும்பி உண்ணும் `Pica’ எனும் உணவுக் கோளாறால் இவர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

தனது அசாதாரண பழக்கத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து, குறிப்பாக தன் மகனிடமிருந்து மறைக்க முயல்வதாகவும், ஒரு வேளை பவுடரை உண்ணும் பழக்கத்தை குறித்து கேள்விப்பட்டால் தன் மகனுக்கும் அந்த விருப்பம் வந்துவிடுமோ என்று அச்சப்படுவதாகவும் இவர் சொல்கிறார்.

பேபி பவுடர்!

இந்த விநோதமான பழக்கத்து அடிமையானதைப் பற்றி பேசியுள்ள டிரேகா மார்ட்டின், ``எனக்கு பேபி பவுடர் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஒரு கட்டத்திற்கு மேல் பேபி பவுடரையே உணவாக உண்ணும் அளவிற்கு அடிமையாகி விட்டேன். அது எப்படி வாசனை வீசுகிறதோ அப்படியே அதன் சுவையும் இருக்கிறது. அதைச் சாப்பிடுவது எனக்கு நன்றாக இருக்கிறது, மகிழ்ச்சியைத் தருகிறது.  பேபி பவுடரை உண்ணும் பழக்கத்தை நிறுத்துவது சவாலானதாக இருக்கிறது. நான் பேபி பவுடருக்கு அடிமையானதை ரகசியமாக வைத்திருக்க முயன்ற போதிலும், என் குடும்பத்தினர் பேபி பவுடர் பாட்டில்கள் விரைவாகக் குறைந்து வருவதைக் கவனிக்கத் தொடங்கினர், இது அவர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியது’’ என்று தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/health/women/us-woman-claims-to-eat-a-bottle-of-baby-powder-every-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக