Ad

வியாழன், 21 டிசம்பர், 2023

திருச்சி: பண்ணை வீட்டில் தூங்கிய இளைஞர் கொடூரமான முறையில் கொலை! - நள்ளிரவில் பயங்கரம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இருக்கிறது தச்சன்குறிச்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் (வயது 50). இவர், திருச்சியில் உள்ள தனியார் மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மூன்று மனைவிகள். இவரின் முதல் மனைவி பொன்னி. இவருக்கு யுவராஜ் (22) மற்றும் ஒரு பெண் என பிள்ளைகள் உள்ளனர். அந்த பெண்ணுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. இதற்கிடையில், முதல் மனைவி இறந்த பிறகு கௌதமன் இரண்டாவதாக மங்கை என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஒரு பெண் குழந்தை. அவரும் இறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, மூன்றாவதாக லால்குடி அருகே பல்லபுரத்தைச் சேர்ந்த பூமதியை கௌதமன் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை என்று மூன்று பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில், மூன்று பெண்களை திருமணம் செய்த கௌதமன், கடந்த 5-ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அதன் பிறகு, அவர் பார்த்து வந்த வேலையை, அவரின் மகனான யுவராஜ் செய்துவந்துள்ளார்.

லால்குடி அரசு மருத்துவமனை

கௌதமனின் மனைவிகள் மற்றும் வாரிசுகள் என இவர்கள் அனைவரும் தச்சங்குறிச்சி பொதுத்தமிழ் சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த யுவராஜ், படுக்கையிலேயே வைத்து கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்த தகவலறிந்து கணக்கியநல்லூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

யுவராஜ்

அங்கே வெட்டி படுகொலை செய்யப்பட்ட யுவராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்வதற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, போலீஸார் விசாரணையில் மறைந்த கௌதமனின் மூன்றாவது மனைவியான பூமதியின் அண்ணன் சின்னராசு, அவர் மகன் வல்லரசு ஆகியோர் சொத்துக்காக கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். படுத்து தூங்கிகொண்டிருந்த இளைஞர் ஒருவர், வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/youngster-brutally-murdered-near-trichy-police-investigation-goes-on

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக