ஐ.டி.ஆர் 1 மற்றும் ஐ.டி.ஆர் 4 ஆகிய வருமான வரிப் படிவங்களை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு படிவங்களிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்தான் வருமான வரிப் படிவங்கள் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை முன்கூட்டியே டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில் கிடைத்த வருமானத்துக்கு 2024-25 நிதியாண்டில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய இந்தப் புதிய படிவங்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.
சம்பளதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், 5,000 ரூபாய் வரை வேளாண் வருமானம் பெறுவோர், ஒரு வீடு வாயிலாக வருமானம் பெறுவோர் ஐ.டி.ஆர் 1 (Sahaj) படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.
தொழில் மற்றும் தொழில்முறை வருமானம் பெறும் தனிநபர்கள், இந்துக் கூட்டு குடும்பங்கள், நிறுவனங்கள், சம்பளம்/பென்ஷன் வாயிலாக 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர் ஐ.டி.ஆர் 4 (Sugam) படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.
CBDT notifies Forms ITR 1 and 4 vide Notification No. 105/2023 in G.S.R. 908(E) dated 22nd December, 2023.
— Income Tax India (@IncomeTaxIndia) December 23, 2023
The Forms are available at:https://t.co/Oc9r0YTzsD
Other Income Tax Return forms will be notified in due course. pic.twitter.com/MaqUuJp3Us
புதிய மாற்றங்கள் என்னென்ன?
2023 பட்ஜெட்டில், வருமான வரிச் சட்டத்தில் Section 80CCH புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசின் அக்னி வீரர்கள் நிதிக்கு செலுத்தப்படும் மொத்தத் தொகைக்கும் வருமான வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த விவரங்களைப் பூர்த்தி செய்வதற்காக ஐ.டி.ஆர் 1 மற்றும் ஐ.டி.ஆர் 4 படிவங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுபோக, நீங்கள் பயன்படுத்தும் வங்கிக் கணக்கின் வகையையும் ஐ.டி.ஆர் 4 படிவத்தில் தெரிவிக்க வேண்டும். வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் நபர் வைத்திருக்கும் எல்லா வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும் படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.
மேலும், ரொக்கமாகப் பெறப்பட்ட வரவுகள் பற்றிய தகவல்களை புதிய ஐ.டி.ஆர் 4 படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.
source https://www.vikatan.com/business/government/income-tax-department-unveils-new-itr1-and-itr4-forms
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக