Ad

சனி, 16 டிசம்பர், 2023

`பாலியல் அடிமை ஒப்பந்தத்தில் கையெழுத்து...' பணியிடத்தில் பெண்ணுக்கு நடந்த கொடுமை!

`அட்ஜஸ்மென்ட்’ இல்லையெனில் வேலை இல்லை, வாய்ப்பு இல்லை, சம்பளம் இல்லை’ என மிரட்டல்கள் இருக்கின்றன.

பணியிடங்களில் பெண்களை பாலியல் பொம்மைகளாகப் பார்க்கும் அவலம் இன்னும் பல இடங்களில் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன.

45 வயதான கிறிஸ்டியன் லாங், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனமான டிரேட்ஷிஃப்டின் (Tradeshift) இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி. இவர் தன் பெண் உதவியாளரைக் கட்டாய பாலியல் அடிமைத்தன ஒப்பந்தத்துக்கு (sex slavery contract) உடன்பட வைத்துள்ளார்.

work (Representational Image)

ஜேன் டோ என்ற முன்னாள் ஊழியர் தாக்கல் செய்த வழக்கின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

உடல் வலி ஏற்படுத்துவது, சிறுநீர் கழிப்பது, வெளிநாட்டு பொருள்களை உபயோகிப்பது போன்ற திகிலூட்டக்கூடிய தேவையற்ற பாலியல் செயலுக்கு தன்னை பல வருடங்களாக உட்படுத்தியதாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்.  

லாங் ஜேன், டோவை தன் நிர்வாக உதவியாளராகப் பணியமர்த்திய சில மாதங்களுக்குப் பிறகு, ஒன்பது பக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி வற்புறுத்தி இருக்கிறார். 

அந்த ஒப்பந்தத்தில், `எல்லா நேரங்களிலும் அவள் பாலியல் ரீதியாகக் கிடைக்க வேண்டும்...’, `130 மற்றும் 155 பவுண்டுகள் (58 முதல் 70 கிலோ) எடையோடு இருக்க வேண்டும்...', `கோபம் அல்லது விரக்தியைக் காட்டாமல், எந்தவிதமான தண்டனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்...’ போன்ற ரூல்ஸ் போடப்பட்டு இருக்கின்றன.

தனது வேலையை இழந்துவிடுவோம் என்ற பயத்திலும், வேலையின் மீது கொண்ட ஈடுபாட்டாலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். 

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் லாங், ``வழக்கில் உள்ள அதிர்ச்சியூட்டும் மற்றும் மோசமான கூற்றுகள் திட்டவட்டமாகத் தவறானவை. 

நான் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது அல்லது என் வாழ்க்கையின் வேறு எந்த நேரத்திலும் யாரையாவது துஷ்பிரயோகதந்துக்கு உட்படுத்தினேன் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன். எனக்கும் என் உதவியாளருக்கும் இடையிலான உறவு, ஒருமித்த கருத்து.

abuse

2014-ல் உதவியாளருடன் ஒருமித்த காதல் உறவு இருந்தது. நான் டேட்டிங் செய்துகொண்டிருந்த ஒருவரை பணியமர்த்திய பிழையை நான் செய்தேன். அது பொறுப்பற்றது. இந்த முடிவுக்காக வருந்துகிறேன். இது ஒரு முட்டாள்தனமான முடிவு, நான் மீண்டும் இதைச் செய்ய மாட்டேன்’’ என்று கூறியுள்ளார். 

பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் குறித்து அறிந்த டிரேட்ஷிஃப்டின் நிர்வாகம் லாங்குக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவரை வேலையை விட்டும் நீக்கியது.

வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்த வழக்கு பணியிடங்களில் பெண்கள் மீதான அதிகார துஷ்பிரயோகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது… 

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா..?! கமென்ட்டில் சொல்லுங்கள்!



source https://www.vikatan.com/health/women/tech-company-ceo-forced-assistant-to-sign-sex-slavery-contract

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக