Ad

புதன், 24 மே, 2023

Doctor Vikatan: வலப்பக்க மார்பகத்தில் வலி... வாயுத் தொந்தரவா, இதயநோயா?

Doctor Vikatan: என் வயது 49. பெண். வலதுபக்க மார்பகத்தில் வலி அதிகமிருக்கிறது. வாயுத்தொல்லை என்கிறார் மருத்துவர். மாத்திரை எடுத்தும் வலி குறையவில்லை. மார்பகத்தில் உணர்வும் குறைவாக இருக்கிறது. இது என்ன பிரச்னையாக இருக்கும்? இதற்குத தீர்வு என்ன?

Hari Haran, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.

இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்

நெஞ்சுப்பகுதியில் எந்த இடத்தில் வலி இருந்தாலுமே அது இதயம் தொடர்பான பிரச்னையின் அறிகுறியா என்பதைப் பரிசோதனை செய்து உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் இடப்பக்க நெஞ்சுப்பகுதியில் வலி இருந்தாலோ, அந்த வலி தோள்பட்டைக்குப் பரவினாலோ, கூடவே மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தாலோதான் அதை நெஞ்சுவலியோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். ஆனால் இதயநோய்களின் அறிகுறிகள் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.

எனவே உங்களுக்கு எந்தப் பகுதியில் வலி இருந்தாலும், மருத்துவரை அணுகி, இசிஜி பரிசோதனை செய்து, அது இதயம் தொடர்பான பிரச்னையா இல்லையா என்று உறுதி செய்யுங்கள். இதயநோய் இல்லை என உறுதியானால், வேறு எந்தக் காரணங்களுக்காக வலது பக்க மார்பகத்தில் வலி வரலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

gastric problem

வாயுப் பிரச்னை முக்கிய காரணமாக இருக்கலாம். புளித்த ஏப்பம், உடலில் ஆங்காங்கே வாயு பிடிப்பது போன்ற உணர்வும் இருக்கிறதா என பாருங்கள். வாயுத் தொந்தரவு என்பதை 'ரெஃப்ளெக்ஸ் டிசீஸ்' என்று சொல்வோம். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், காபி, டீ, காரமான உணவுகள், சிட்ரஸ் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். வயிறு முட்ட சாப்பிட்டு உடனே படுக்கக்கூடாது. தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-pain-in-right-breast-gas-or-heart-disease

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக