Ad

திங்கள், 22 மே, 2023

நடிகர் ஆதித்ய சிங் ராஜ்புத் அப்பார்ட்மென்டில் மர்ம மரணம்... என்ன நடந்தது?!

பாலிவுட் நடிகர் ஆதித்ய சிங் ராஜ்புத்(32) அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் வசித்து வந்தார். நேற்று அவர் திடீரென பாத்ரூம்பில் மயங்கி விழுந்தார். இதனை வீட்டு வேலைக்கார பெண் பார்த்து கட்டட வாட்ச்மெனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சோதித்து பார்த்த போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக ஆதித்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அவரது நண்பர் ஒருவரும் தங்கி இருந்தார். போலீஸார் Accidental death என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவரது மரணத்திற்கான காரணம் குறித்து தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக மருந்து பயன்படுத்தியதால் இறந்திருக்ககூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து அவரது நண்பர்களிடம் விசாரித்த போது ஆதித்யாவும் அவரது நண்பர்களும் நேற்று அதிகாலை வரை அறையில் பார்ட்டி கொண்டாடினர். நேற்று பிற்பகலில் ஆதித்யாவிற்கு வாந்தி வந்ததாக கூறப்படுகிறது. உடனே அவர் பாத்ரூம் சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அவரது அறையில் தங்கி இருந்த நபர், பணிப்பெண் உதவியுடன் கட்டட வாட்ச்மேனுடன் சேர்ந்து ஆதித்யாவை மருத்துவமனையில் சேர்த்ததாக கூறப்படுகிறது. ஆதித்யாவின் உறவினர்கள் டெல்லியில் இருக்கின்றனர். அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸார் ஆதித்யாவுடன் தங்கி இருந்த அவரது நண்பர் மற்றும் கட்டட வாட்ச்மேன் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காவல்துறை

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆதித்ய சிங் டெல்லியில் தனது படிப்பை முடித்தார். தனது 17வது வயதில் மாடலாக வாழ்க்கையை தொடங்கிய ஆதித்யா ஏராளமான படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். அவரது திடீர் மரணம் இந்தி திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஆதித்ய சிங் 125க்கும் அதிகமான விளம்பரங்களில் நடித்துள்ளார்.



source https://www.vikatan.com/crime/accidents/actor-aditya-singh-rajput-fainted-and-died-in-bathroom

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக