Ad

சனி, 20 மே, 2023

Doctor Vikatan: நீண்ட நேரம் நிற்பது முதுகுவலியை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: நீண்ட நேரம் நிற்பது முதுகுவலியை ஏற்படுத்துமா? தொடர்ச்சியாகப் பல மணி நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்குத்தான் முதுகுவலி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நின்றாலும் வருமா? வலியிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா

ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா | சென்னை

நீண்ட நேரம் நிற்பது, உட்கார்ந்திருப்பது என எல்லாமே முதுகுவலிக்கு காரணமாகலாம். அது நீங்கள் நிற்கும், உட்கார்ந்திருக்கும் பொசிஷனை பொறுத்தது. உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் உள்ளபடியான இருக்கையாக இருந்தால் முதுகுவலி குறைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இன்னும் சொல்லப் போனால் நிற்பதைவிடவும், உட்கார்ந்திருப்பதாலேயே அடிமுதுகுவலி வரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்கின்றன.

உட்காரும்போதும் நிற்கும்போதும் கால்களைக் குறுக்காக வைத்திருப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் நரம்புகள் அழுத்தப்படுவதால், ரத்த ஓட்டம் குறையவும் வாய்ப்புகள் உண்டு. கால் நரம்புகளிலிருந்து தான் இதயத்துக்கு ரத்தம் செல்கிறது. அதனால் இதயத்துக்கான அழுத்தமும் கூடி, ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

நீண்ட நேரம் நின்றபடி வேலை பார்ப்பவர்களும் இடையிடையே எழுந்து சிறிது தூரம் நடக்கலாம். முதுகுக்கு சப்போர்ட் உள்ளபடி சிறிது நேரம் சாய்ந்து உட்காரலாம்.

பல மணி நேரம் நின்றபடி வேலை பார்ப்பவர்கள் Sit- Stand- Work டெக்னிக்கை பின்பற்ற வேண்டும். அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தால் அரை மணி நேரம் நிற்கலாம். பிறகு வேலையைத் தொடரலாம். அரை மணி நேரம் வாய்ப்பில்லை என்றால் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது இதைச் செய்ய வேண்டும்.

Body pain

நீண்ட நேரம் நிற்பதாலும் கலோரிகள் எரிக்கப்படும். எனவே இடையிடையே தண்ணீர் குடிப்பது அவசியம். இந்த அறிவுரைகள் பொதுவானவை. கர்ப்பிணிகள், வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள் , வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை உள்ளவர்கள் எல்லாம் நீண்ட நேரம் நிற்பதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-does-standing-for-long-periods-of-time-cause-back-pain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக