சேப்பாக்கத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. கொல்கத்தா அணி சார்பில் கேப்டன் நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் சிறப்பாக ஆடியிருந்தனர். ரிங்கு சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணங்கள் குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி பேசியிருந்தார்.
தோனி பேசுவதற்காக மைக் முன் வந்து நிற்க, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்வியே தோனிக்கு கேட்கவில்லை. இதனால் ஸ்பீக்கர் தோனி காதை கொண்டு சென்று ஒரு ஜாலி மோடுக்கு வந்து சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து பேசத்தொடங்கியவர், 'இது 180 ரன்களை எடுக்க வேண்டிய விக்கெட். பந்துவீசும் பனியின் தாக்கம் பெரிதாக இருந்தது. மேலும், முதல் இன்னிங்ஸின் போது ஸ்பின்னர்களுக்கு பிட்ச் கொஞ்சம் அதிகமாகவே ஒத்துழைத்தது.
தோல்விக்கு பேட்ஸ்மேன்கள், பௌலர்கள் என யார் மீதும் பழி போட முடியாது. ஷிவம் துபே ரொம்பவே சிறப்பாக ஆடுகிறார். அவர் தன்னுடைய செயல்பாட்டில் எப்போதுமே திருப்திப்பட்டுக் கொண்டதில்லை. அதனாலயே தொடர்ந்து மெருகேறிக் கொண்டே இருக்கிறார். சஹார் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். ஃபீல்டுக்கு ஏற்ற வகையில் பந்துவீசும் திறன் அவரிடம் அதிகமாகவே இருக்கிறது.' என்றார்.
லீக் சுற்றில் சேப்பாக்கத்தில் சென்னை ஆடும் கடைசிப் போட்டி இதுதான் என்பதால் போட்டி முடிந்தவுடன் தோனியுடன் சென்னை அணி வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு நடைபெற்றது. 'Yellorukkum Nandri' - மீண்டும் சந்திப்போம் என்கிற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மைதானம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. ரசிகர்களுக்கு சில பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டது.
source https://sports.vikatan.com/cricket/dhoni-post-match-thanks-giving-speech-to-his-fans
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக