Ad

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

Doctor Vikatan: பீரியட்ஸ் ப்ளீடிங் கலர்... எது நார்மல், எது அப்நார்மல்?

பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறம் எப்படியிருக்க வேண்டும்? நிறம் மாறுவது என்பது எதை உணர்த்துகிறது?

நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

ரத்தப்போக்கு எந்த நிறத்தில் இருந்தாலும் அது நார்மல்தான். ஒரே விஷயம்.... ஃப்ரெஷ்ஷான ரத்தம் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

உதாரணத்துக்கு, கையிலுள்ள சருமம் கட் ஆகி ரத்தம் வரும்போது, அது ஃப்ரெஷ் ரத்தம் என்பதால் இளஞ்சிவப்பாக இருக்கும்.

periods blood

அதுவே ஆக்ஸிஜனுக்கு எக்ஸ்போஸ் ஆக, ஆக சற்று அடர்நிறத்தில் மாறும், அவ்வளவுதான். பீரியட்ஸின் ஆரம்பத்தில், அது வெஜைனா பகுதி சுரப்புடன் கலந்து வெளியேறுவதால் லைட் சிவப்பு நிறத்தில் இருக்கும். போகப்போக லேசான அடர்சிவப்பு நிறத்துக்கு மாறும்.

அதுவே அடர்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறது என்றால் அது பெரும்பாலும் கட்டிகளாகவே இருக்கும். மாதவிலக்கு ரத்தமானது கட்டிகளாக மாறாது.

ஒருவேளை உங்களுக்கு அப்படி கட்டிக்கட்டியாக ரத்தம் வெளியேறினால் உங்களுக்கு ப்ளீடிங் அதிகமிருப்பதாக அர்த்தம்.

blood test

உங்களுக்கு மூன்று முதல் நான்கு நாள்களுக்குத்தான் பீரியட்ஸ் இருக்கிறது, ஆனாலும் கட்டிகளாக வெளியேறுகிறது என்றால் அது நார்மலான விஷயமல்ல. அது குறித்து மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம்.

மற்றபடி பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறத்துக்கும் வேறெதற்கும் தொடர்பில்லை. அது குறித்த பயமும் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/women/doctor-vikatan-bleeding-during-periods-which-is-normal-and-which-is-abnormal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக