Ad

சனி, 20 ஆகஸ்ட், 2022

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 20

மாஸ்டர் தன்ராஜ் என் குருநாதர்களில் முக்கியமானவர்.

அவர் சினிமா இசையமைப்பாளர்களை கண்டபடி திட்டுவார். ’நீயும் கோடம்பாக்கத்துக்காரன்களோடு சேர்ந்து விட்டாயா? அங்கிருக்கும் மடையர்களக்கு என்னடா தெரியும்? அவர்களிடம் நீ வேலை செய்தால் உருப்பட்ட மாதிரிதான்’ என்று எனக்கும் திட்டு விழும்.

அப்போது லண்டனிலுள்ள ட்ரினிட்டி இசைக் கல்லூரியின் தியரி எக்ஸாமுக்கு நான் பணம் கட்டியிருந்தேன்.

அன்றைக்கு அவருக்கிருந்த கோபத்தில் ‘சொல்லிக் கொடுக்க முடியாது போடா‘ என்று சொல்லிவிட்டார். ‘பரீட்சையில் நீ என்ன பண்றேனு பாக்கறேன்’ என்றார்.

‘சார்.. உங்களிடம் கற்றுக்கொள்ளாமலேயே 85 மார்க் வாங்கிக் காட்டவில்லை என்றால்...’ என்று சபதம் செய்தேன். சொன்னாற்போல் 85 மார்க்கே வந்திருந்தது.

Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 20

‘நீ கிரேட்ரா’ என்றார் சந்தோஷமாக!

மாஸ்டருக்க எத்தனையோ உறவினர்கள் இருந்தாலும... நானிருந்த நேரத்தில் ஒருவர்கூட அவரைப் பார்க்க வந்து போனதில்லை.

ஒரு முறை நியைக் குடித்துவிட்டு எங்கோ வண்டியில் அடிபட்டு ரூமில் கிடக்கிறார் என்று கேள்விப்பட்டு பார்க்கச் சென்றோம். என்னை அடையாளம் கண்டுகொண்டார். காலைப் பிடித்துவிட்டேன். என் கைகள் பட்டவுடன் வலித்தது போலும் ‘அன்டான்டே அன்டான்டே’ என்றார். அன்டான்டே (Andante) என்றால் இத்தாலிய இசைமொழிக் குறியீட்டில் ‘மெதுவாக’ என்று அர்த்தம்.

மேற்கத்திய இசையில் - எல்லாம் தெரிந்திருந்தும் - அவருக்க இந்த உலகின்மீது ஒரு வெறுமையான வெறுப்பு உணர்ச்சி கடைசி வரை இருந்தது.

அவர் இறந்த பிறகு அவருடைய சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டு என்னைப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 20

அனைவருக்கும் ஒரே ஒரு பிரச்னை தான். சாய் லாட்ஜ் ஃ2-ம் எண் அறையில் இருந்த மாஸ்டரின் பியானோ தங்களுக்குத்தான் சொந்தமானது என்று கூறினர். அதில் ஒரு பாதிரியாரும் இருந்தார்.

எனக்குத் தெரிந்த உண்மை - அந்த ‘பியானோ’ ராயப்பேட்டையில் இருந்த மேன்ஸில் என்பவக்குச் சொந்தமானது. அதற்கு மாதா மாதம் வாடகை செலுத்தி வந்தார் மாஸ்டர்.

உலகின்மீது மாஸ்டர் வைத்திருந்த வெறுப்பு உணர்ச்சி எவ்வளவு நியாயமானது?

- பார்வை தொடரும்

- பொன்.சந்திரமோகன் / இளையராஜா

(05.09.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)



source https://cinema.vikatan.com/tamil-cinema/rajavin-parvaiyil-ilaiyaraaja-20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக