Ad

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

லட்சுமி கடாட்சம்

கோவை இருகூரில் சுமார் 1500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயத்தில் இருந்தபடி, தன்னை நாடி வருவோருக்கு ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்கிறார் ஶ்ரீநீலகண்டேஸ்வரர்.

காமதேனு வழிபட்ட சிவலிங்கம்!

சேர, சோழ, பாண்டியர்கள் வழிபட்ட தலம் இது. ராஜராஜதேவன், அமரபுயங்கன், சேரன் வீரகேரளன், கரிகால் சோழன் முதலான பலரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர், திருப்பணிக்கு உதவியுள்ளனர் எனத் தெரிவிக்கிறது கல்வெட்டு. இருகூர் நீலகண்டேஸ்வரரின் லிங்கத் திருமேனியை காமதேனுப் பசு வழிபட்டது என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்.

வியாழக்கிழமைகளில், இங்கு வந்து நீலகண்டேஸ்வரருக்கும் சௌந்தர லிங்கேஸ்வரருக்கும் வில்வ மாலை சார்த்தி, தட்சிணாமூர்த்தியையும் பிரம்மாவையும் வணங்கி வந்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்; ஞானத் துடன் யோகமும் கைவரப் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

- ஆர்.ராஜு, கரூர்நடிகர் சோமனையும் நடிகை ராணி சந்திரா, அவருடைய அம்மா என எல்லோரையும் திடீரென சந்தித்ததும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தேன்.

“என்ன பாம்பே பிரவேசம்... எதுவும் ஷூட்டிங்கா?” என்றேன் இருவரையும் பார்த்து.

“இல்ல லக்ஷ்மி.. நான் அமெரிக்கா போறேன்” என்று சோமன் சொல்ல...

“நாங்களும்தான் லக்ஷ்மி. நான், அம்மா, என் தங்கைகள் எல்லோருமே அமெரிக்கா போறதுக்கு டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு..” என்றார் ராணி சந்திரா.

“நீங்களுமா? எல்லாருமா? என்ன திடீர்ன்னு?” என்றேன் ஆச்சர்யமாக.

லக்ஷ்மி சிவச்சந்திரன்

ராணி சந்திரா நல்ல நடிகை மட்டுமல்ல; பொறுப்பான சகோதரியும் கூட. தன் தங்கைகள் மூவரையும் வளர்த்து ஆளாக்குவதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் எனக்குத் தெரியும்

``ஐயோ லக்ஷ்மி... அதை ஏன் கேக்கிறீங்க. நான், அம்மா, தங்கைகள் எல்லோருமே தான் போறோம். தங்கைகளை அங்கே ஏதாவது வேலையில் சேர்த்துவிட்டால் அவங்க எதிர்காலம் நல்லா இருக்கும் இல்லையா! அவங்களுக்கு நான்தானே செய்யணும்.. நானும் அங்கேயே ஏதாவது பார்த்துக்கிட்டு செட்டிலாயிடலாம்னு இருக்கேன். ஆனா அதுக்குள்ளே மெட்ராஸ்ல எம்பஸியில் வரச்சொல்றாங்க. ஒரு வேலை வந்துடுச்சு. இப்போ உடனடியா நான் மெட்ராஸ் போய்ட்டு நாளை திரும்பி பாம்பே வரணும்!” என்று ராணி சந்திரா சொன்னார். அவர் குரலில் பதற்றம்.

“இப்போ சென்னை போய்ட்டு வரணுமா? என்ன ராணி சொல்றீங்க?”

அவருடைய அம்மா என்னிடம், “மோளே... நானும் இவளும் மாத்திரம்தான் மெட்ராஸ் போய்ட்டு வரணும். ஆனா இவங்களை எங்கே தங்கவைக்கிறது! அதான் எல்லோருமே போய்ட்டு வந்துடலாம்னு பார்த்தோம். ஆனா மூணு டிக்கெட்தான் இருக்கு. ரெண்டுபேருக்கு டிக்கெட் இல்லை!” என்றார்.

நானும் அங்கே தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டுப் பார்த்தேன்... 2 டிக்கெட் கிடைக்குமா என்று. ஆனால் கிடைக்கவில்லை.

அப்போது ஓர் அறிவிப்பு... இரவு 7.30-க்கு கிளம்ப வேண்டிய எங்கள் ஃப்ளைட் 9.30-க்கு கிளம்பும் என அறிவிக்கப்பட்டது. ஏதோ தொழில்நுட்பக் கோளாறாம். அப்புறம் 11 மணிக்குக் கிளம்பும் என்று மீண்டும் ஓர் அறிவிப்பு. பிறகு 12 மணிக்கு தள்ளிப் போடப் பட்டது. எனக்கு அப்போதே அசதியாகி விட்டது.

லக்ஷ்மி சிவச்சந்திரன்



ஜிதேந்திராவிடம், “இதுக்குமேல எல்லாம் நான் மெட்ராஸ் போய், ஏர்போர்ட்டிலிருந்து காரைப் பிடிச்சு வீட்டுக்குப் போறதுக்கு, பேசாம இங்கேயே ரெஸ்ட் எடுத்துட்டு காலை ஃப்ளைட்டில் போய்க்கிறேன்” என்றேன்.

கிட்டத்தட்ட எல்லோருமே அந்த மூடில்தான் இருந்தார்கள். ஏற்கெனவே ‘நாம் இன்னிக்குப் போவோமா’ என்று கேட்ட காமெடியன், “நான் தான் அப்போதே சொன்னேனே... எனக்கு ஏதோ தோணுச்சு. வாங்க, எல்லோருமே காலையில் கிளம்பலாம்” என்று சொல்லிவிட்டு, யாரிடமோ சொல்லி ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ‘சென்டார்’ என்ற ஹோட்டல் புதிதாக அப்போதுதான் திறக்கப்பட்டிருந்தது. அதில்தான் தங்குவதாக ஏற்பாடு.

‘நம்ம டிக்கெட் எல்லாம் என்ன பண்றது?’ என்ற கேள்வி தோன்றிய அடுத்த கணம் ராணி சந்திராவிடம் போனேன். எனக்கும் என்னுடைய சிகையலங்கார நிபுணருக்குமான 2 டிக்கெட்டுக்களை ராணி சந்திராவிடம் கொடுத்தேன்.

“நான் இப்போ கிளம்பல ராணி... நீங்க போயிடுங்க!” என்றேன்.

அப்போதெல்லாம் நமக்கு டிக்கெட் வேண்டாம் என்றால் வேறொரு பயணிக்கு மாற்றிக் கொடுக்கலாம். இப்போது போன்ற அடையாள அட்டை பிரச்னை எல்லாம் இல்லை. அதனால் சுலபமாக அவர்களிடம் கொடுக்க முடிந்தது.

ராணிக்கு பெரிய நிம்மதி.

“அப்பாடா... எப்படிடா போய்ட்டு வர்றதுன்னு மலைச்சுப் போயிருந்தேன்... தாங்க்ஸ் லக்ஷ்மி” என்று என் கைகளை அன்போடு பற்றி, அழகிய சிரிப்போடு நன்றி சொன்னார். அந்தச் சிரிப்பை அதன் பின்னர் பார்க்க முடியாமலேயே போய்விடும் என்பதை விதி மட்டுமே அறிந்திருந்தது.

நாங்கள் ஹோட்டலுக்குப் போய் படுத்து விட்டோம்.

நள்ளிரவு 2 மணி இருக்கும். எங்கோ வெகு அருகில் ‘டமார்’ எனப் பெரிதாக ஏதோ வெடிக்கும் சத்தம்!

திடுக்கிட்டு விழித்தாலும் நாள் முழுவதும் படப்பிடிப்பில் நின்ற அசதி, ‘ப்ச்.. காலையில் பார்த்துக்கலாம்!’ என்று திரும்பத் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.

அதிகாலை 5 மணி.. அறைக் கதவு ‘தடதட’ வென தட்டப்படும் சத்தம் கேட்டுத்தான் விழித்தேன்.

கதவைத் திறந்தால்... அங்கே அந்த மூத்த காமெடியன் நடிகரும், ஏர்போர்ட் அதிகாரி ஒருவரும் நின்றுகொண்டிருந்தனர்.

மிகுந்த பரபரப்போடு அந்த அதிகாரி, “மேடம்... உங்க டிக்கெட்டை நீங்க யார்கிட்டே கொடுத்தீங்க?” என்றார்.

“ஏன்?” என்றேன் குழப்பத்தோடு. அடி வயிற்றில் ஒரு கலக்கம் பிசைய ஆரம்பித்திருந்தது.

லக்ஷ்மி சிவச்சந்திரன்

“ராணி சந்திரான்னு ஒரு ஆர்டிஸ்ட், அவங்க அம்மா... ரெண்டுபேருக்கும்தான் எங்க டிக்கெட்டைக் கொடுத்தேன். என்னாச்சு?” என்றேன். உடல் முழுவதும் ஒருவித பயம் பரவியது.

“மேடம்... தயவுசெஞ்சு கொஞ்சம் ஏர்போர்ட்டுக்கு வாங்க!” என்றார்.

‘என்னடா இந்த நேரத்தில் வந்து ஏர்போர்ட்டுக்குக் கூப்பிடறாரே!’ என்ற கலக்கத்துடனேயே நானும் என் ஹேர் டிரெஸ்ஸரும் அவர்களுடன் கிளம்பினோம்.

அங்கே போனால்…

கடவுளே.. வாழ்க்கையில் யாருக்கும் அப்படி ஓர் அனுபவம் வரவே கூடாதுங்க!

நாம் காப்பாற்றப்பட்டுவிட்டோம். இறைவன் நம்மைக் காப்பாற்றிவிட்டார்… அது வேறு விஷயம்!

ஆனால்.. நம்முடைய டிக்கெட்டில் போன இரண்டு உயிர்கள்... அப்படியே கருகிப்போய், உடலே அடையாளம் தெரியாமல் கிடந்தார்கள்.

பயணிகள் எல்லோரும் சீட்டில் அமர்ந்து, சீட் பெல்ட் போட்டதும், டேக் ஆஃப் ஆன மறு விநாடியே வானில் வெடித்துச் சிதறி இருக்கிறது அந்த இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம்.

தொழில்நுட்பக் கோளாறு என புறப்படும் நேரத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த விமானம், கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்ற ஆசுவாசத்தில் பயணியர் ஏறி அமர்ந்ததும், கிளம்பும்போது வெடித்திருக்கிறது. அத்தனை பேரும் உட்கார்ந்த நிலையிலேயே கருகிவிட்டனர்.

எங்களுக்கு இரவில் கேட்ட சத்தம் அதுதான்..!

என்னை யார் காப்பற்றியது...

ஏன் நான் காப்பாற்றப்பட்டேன்...

அந்த விமானம் அவ்வளவு தாமதமாகி, ஏன் எங்கள் பயணம் ரத்தாக வேண்டும்.

டிக்கெட்டுக்காகத் தவித்த அந்தத் தாயும் மகளும் எங்கள் டிக்கெட்டில் ஏன் பயணிக்க வேண்டும்.

ஏன்.. ஏன்.. ஏன்?

இதுபோன்ற பலவிதமான கேள்விகள்.

47 வருடங்களுக்கு முன், அன்று நான் பிரயாணம் செய்திருந்தால், இன்று உங்களோடு இப்படி இந்தத் தொடர் மூலம் பேசிக் கொண்டிருந்திருக்க மாட்டேன்.

இது ஒரு சம்பவம் மட்டுமல்ல; இது போல பல விபத்துகளிலிருந்து நான் காப்பாற்றப்பட்டிருக்கிறேன்.

எப்படி நடந்தது! யார் நடத்தி வைத்தது!

பேசுவோம்!

- கடாட்சம் பெருகும்...

காமதேனு வழிபட்ட சிவலிங்கம்!

கோவை இருகூரில் சுமார் 1500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயத்தில் இருந்தபடி, தன்னை நாடி வருவோருக்கு ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்கிறார் ஶ்ரீநீலகண்டேஸ்வரர்.


சேர, சோழ, பாண்டியர்கள் வழிபட்ட தலம் இது. ராஜராஜதேவன், அமரபுயங்கன், சேரன் வீரகேரளன், கரிகால் சோழன் முதலான பலரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர், திருப்பணிக்கு உதவியுள்ளனர் எனத் தெரிவிக்கிறது கல்வெட்டு. இருகூர் ஶ்ரீநீலகண்டேஸ்வரரின் லிங்கத் திருமேனியை காமதேனுப் பசு வழிபட்டது என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்.

வியாழக்கிழமைகளில், இங்கு வந்து ஶ்ரீநீலகண்டேஸ்வரருக்கும் ஶ்ரீசௌந்தர லிங்கேஸ்வரருக்கும் வில்வ மாலை சார்த்தி, ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் ஶ்ரீபிரம்மாவையும் வணங்கி வந்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்; ஞானத் துடன் யோகமும் கைவரப் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

- ஆர்.ராஜு, கரூர்



source https://www.vikatan.com/spiritual/gods/actress-lakshmi-shares-her-spiritual-experience-as-lakshmi-kadatcham

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக