Ad

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

ஒன் பை டூ

பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க.

“இது அவருக்குத் தேவையில்லாத விவகாரம். ஒருகாலத்தில், தனது உடன்பிறந்த சகோதரர் அழகிரிக்கு தி.மு.க-விலும், மக்களிடமும் செல்வாக்கு அதிகமிருந்த காரணத்தால், எங்கே கட்சியில் தனக்கு முன்னால் சென்றுவிடுவாரோ என்று புறவாசல் வழியாகத் திட்டம் தீட்டி அவரை வெளியே அனுப்பியவர் ஸ்டாலின். இன்றுவரை, தன் சகோதரி கனிமொழியைக் கட்சியில் வளரவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். முதலில் உங்கள் கட்சியில் நடக்கும் பிரச்னைகளைச் சரிசெய்யப் பாருங்கள். 31 வருடங்கள் தமிழ்நாட்டை ஆட்சிசெய்த கட்சி அ.தி.முக. இப்போது நடப்பது எங்கள் சொந்தக் கட்சிப் பிரச்னை, அதை நாங்கள் சரிசெய்துகொள்வோம். இதில் சம்மன் இல்லாமல் நீங்கள் ஆஜராக வேண்டாம். முதல்வர், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான 10 பிரச்னைகளைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். இதிலிருந்து முதல்வரின் தொகுதி உட்பட, தமிழ்நாடு முழுவதும் தீர்வுகாணப்படாத பல பிரச்னைகள் இருப்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். தி.மு.க அரசின் கையாலாகாத்தனத்தையும், மாநிலத்தின் உண்மைநிலையையும் பேசிவருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக அவரின் பணியை முறையாகச் செய்துகொண்டிருக்கிறார். நீங்களும், முதலில் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள் முதல்வரே!”

பாபு முருகவேல்
சரவணன் அண்ணாதுரை

சரவணன் அண்ணாதுரை, செய்தித் தொடர்பாளர், தி.மு.க.

“உண்மையைச் சொல்லியிருக்கிறார். ‘எதிர்க்கட்சியினர் ஆக்கபூர்வமான விமர்சனங்களைச் சொல்லும்போது, நாங்கள் ஏற்றுக்கொள்வோம்’ என்று முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற சமயத்திலேயே தெளிவாகச் சொல்லியிருந்தார். வெள்ள பாதிப்பு சமயத்தில், அம்மா உணவகத்தில் மக்களுக்கு இலவசமாக உணவளிக்க வேண்டும், அம்மா உணவகங்களை மூடக் கூடாது என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தார்கள். நாங்கள் செயல்படுத்தினோம். இப்படி மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் எதிர்க்கட்சியினர் சொல்லும் விஷயங்களைக்கூட தி.மு.க அரசு செய்துதான் வருகிறது. இப்போது அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் செய்தி பெரிய அளவில் வெடித்திருக்கிறது. கொடநாடு கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்திருக்கிறது. இந்த விவகாரத்திலிருந்து மக்களை திசைதிருப்ப, தேவையற்ற விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் டெண்டர் விடுவதும், கமிஷன் அடிப்பதும் மட்டுமே. இப்போது தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் சிறந்த முதல்வர் என்று எல்லோராலும் பாராட்டப்படுகிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையில் இப்படி யெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் வெறுப்பு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்!”



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-stalin-statement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக