Ad

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

``என்னை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்...” - தன்னைத் தானே வாடகைக்கு விட்ட ஜப்பான் இளைஞர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ (39). கல்லூரி படிப்பை நிறைவு செய்த அவர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். அந்த நிறுவனங்களில் ஏற்பட்ட சங்கடம் காரணமாக கடந்த 2018-ம் ஆண்டில் எவ்வித முதலீடும் இல்லாமல் புதிய தொழிலை தொடங்கினார். இதுதொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ``கடைக்கு செல்வதற்கு ஆள் தேவை, விளையாடுவதற்கு ஆள் தேவை, எளிதான வேலைகளுக்கு ஆள் தேவை என்றால் என்னை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். ஆனால் கடினமான வேலைகளை செய்ய மாட்டேன்” என பதிவிட்டார்.

இதைப் பார்த்த ஆச்சர்யப்பட்ட பொதுமக்களில் பலர், ஷோஜி மோரிமோட்டாவை வாடகைக்கு முன்பதிவு செய்தனர். முதலில் குறைவான தொகையை வசூலித்த அவர் தற்போது ஒரு கோரிக்கைக்கு 69 பவுண்டுகள் (ரூ. 6,641) வசூலிக்கிறார் என கூறப்படுகிறது. பாலியல் ரீதியாகவோ, வீடுகளைச் சுத்தம் செய்யவும், துணி துவைக்கவும், கடினமான வேலைக்கு அழைத்தால் அவர்களை நிராகரித்து விடுவேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/international/japanese-man-gets-paid-with-a-rent-to-literally-do-nothing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக