Ad

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

உஷார் மக்களே, இதை எல்லாம் செஞ்சா வங்கிக்கு அதிக கட்டணம் கட்ட வேண்டியிருக்கும்!

மாதாந்தர இலவச வரம்பை மீறி ஏ.டி.எம்-களில் பணம் எடுத்தால், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ரூ.21 எடுக்கப்படும் என்கிற விதிமுறை இந்த ஜனவரி 1-ம் தேதி முதலே வந்துவிட்டது. இது கடந்த ஆண்டில் ரூ.20 ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ATM

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி ஏ.டி.எம்-களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து இலவசப் பரிவர்த்தனையும், மற்ற வங்கி ஏ.டி.எம்-களில் மூன்று இலவசப் பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும். இதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகமான கட்டணத்தை நீங்கள் செலுத்தியாக வேண்டும்.

இது ஏற்கெனவே நடைமுறையில் இருந்தாலும், இந்த ஆகஸ்ட் 1 முதல் புதிதாக இன்னொரு விதிமுறையும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதாவது, அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் செய்யப்படும் ஒவ்வொரு நிதிப் பரிவர்த்தனைக்கும் ரூ.17 மற்றும் நிதி அல்லாத ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.6 பரிமாற்றக் கட்டணமாகவும் வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

ஏ.டி.எம்

நிதி அல்லாத பரிவர்த்தனை என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? நம் வங்கிக் கணக்கில் உள்ள கணக்கு இருப்பதை சரிபார்ப்பது, கணக்கு ஸ்டேட்மென்ட் எடுப்பது போன்ற விஷயங்களைக் குறிக்கும். மிகவும் அவசியம் எனில் மட்டுமே இனி இந்த நிதி அல்லாத பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும். அடிக்கடி செய்தோம் எனில், கூடுதலாக கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை மறக்காதீர்கள்.

அதிகரித்துவரும் ஏ.டி.எம் பராமரிப்பு செலவுகளைச் சமாளிக்க வங்கிகள் ஏ.டி.எம் சேவைக் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றன.



source https://www.vikatan.com/business/finance/be-warned-folks-all-this-will-incur-a-higher-fee-to-sencha-bank

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக