கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் கருப்பையா. இவர், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, இப்போது நகராட்சியாக உள்ள புஞ்சை புகலூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது, புகலூர் நகராட்சி அ.தி.மு.க செயலாளராக உள்ள கே.சி.விவேகானந்தன் என்பவர், சுப்பு கார்டன் என்ற பெயரில் உள்ள மனைகளுக்கு, உரிய முறையில் மனைப்பிரிவு அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு தடையின்மை சான்று கேட்டு, கருப்பையாவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு இளநிலை உதவியாளராக பணியாற்றிய கருப்பையா மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புகலூர் பேரூராட்சியில அப்போது பணியாற்றிய கருப்பையா நங்கவரம் பேரூராட்சிக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு தன்னுடைய கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு தடையின்மை சான்றிதழ் பெற்று, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அ.தி.மு.க நகர செயலாளர் விவேகானந்தன், அவர் மனைவி லலிதா, மாமியார் சரோஜா, ஜாகிர் உசேன், கண்ணன் ஆகிய ஐந்து நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த மோசடியான பத்திரப் பதிவு காரணமாக, பேரூராட்சிக்கு ரூபாய் 15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, உதவி இயக்குநர் பேரூராட்சிகள், திண்டுக்கல் மண்டலத்திற்கு கருப்பையா அப்போது புகார் தெரிவித்தார்.
கைது
கரூர் மாவட்ட காவல்துறையிலும் புகார் கொடுத்ததையடுத்து, போலீஸார் விவேகானந்தன் உள்ளிட்ட 5 பேர் மீது, 9 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, தலைமறைவாக இருந்த விவேகானந்தனை கரூர், கோவை சாலையில் பதுங்கியிருந்தபோது, பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அலுவலகத்தில் வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரனைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.
விருப்பமில்லாத வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அதிலும் உச்சம் தொடலாம்
நைனிடாலில் உள்ள கல்லூரியில் மிகச் சிறப்பான மதிப்பெண்களுடன் கல்வியை முடித்தார் மானெக் ஷா. லண்டனுக்குச் சென்று மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் அப்பா இதற்கு அனுமதிக்கவில்லை (இத்தனைக்கும் அவரும் டாக்டர்தான்). ‘வெளிநாட்டில் தனியே தங்கும் அளவுக்கு உனக்கு வயது ஆகவில்லை’ என்று ஒரு காரணத்தைக் கூறினார். ஒருவித வெறுப்பில் இந்திய ராணுவத்திற்கான நுழைவுத் தேர்வை எழுதினார் மானெக் ஷா. அதில் தேர்வாகி பின் ராணுவத்தில் பணியாற்றி அதிலும் உச்சம் தொட்டார்.
மானெக் ஷா
நகைச்சுவை உணர்வு என்றும் கைகொடுக்கும்
ஒருமுறை பர்மாவில் நடைபெற்ற யுத்தத்தில் மானெக் ஷாவின் உடலில் கடும் காயம் ஏற்பட்டது. குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது அவரது உடல். உடனடி அறுவை சிகிச்சை தேவை என்று தீர்மானித்த டாக்டர் என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு மானெக் ஷா ‘பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஒரு கழுதை என்னை உதைத்துவிட்டது’ என்றாராம். துன்பப்படும் நேரத்திலும் நேரத்தில் எப்படி ஒரு நகைச்சுவை பாருங்கள்! வாழ்வின் பல கட்டங்களில் இந்த நகைச்சுவை உணர்வு அவருக்குக் கைகொடுத்ததாம்.
தொடக்கப்புள்ளியாக நீங்கள் இருக்கலாம்
பங்களாதேஷ் என்ற புதிய நாடு இந்தியாவின் உதவியுடன் உருவானது. அதற்குப் பிறகு நேபாளத்திற்குச் சென்றிருந்தபோது அதை ஆண்டுகொண்டிருந்த மன்னர் மகேந்திரா, ராயல் நேபால் ஆர்மி என்ற அமைப்பின் கௌரவத் தளபதியாக அவரை நியமித்து அதற்கு அடையாளமாக ஒரு வாளையும் அளிக்க முன்வந்தார். இதற்கு ஒத்துக் கொண்டார் மானெக் ஷா. இதுதான் இரண்டு அண்டை நாடுகள் தங்கள் மாற்றுத் தளபதிகளை கௌரவ ராணுவத் தலைவராக ஏற்றுக் கொள்வதற்குத் தொடக்கமாக அமைந்தது.
பெருந்தன்மை பெரும் பலனளிக்கும்
பாகிஸ்தானிய ராணுவம் சரணடைந்தது. இதற்காக டாக்காவுக்குச் சென்று அந்தச் சரணடைதல் நிகழ்வை ஏற்குமாறு மானெக் ஷாவைப் பணித்தது இந்திய அரசு. அவர் அதை மறுத்தார். மாறாகக் கிழக்குப் பகுதியின் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகஜீத் சிங்தான் இதை ஏற்கத் தகுதியானவர் என்று கூறினார். இதுபோன்ற பெருந்தன்மை அவருக்குப் பெரும் மரியாதையை ஈட்டித் தந்தது.
மானெக் ஷா
நியாயமான துணிச்சல் தவறே அல்ல
அந்தக் காலத்தில் பிரதம மந்திரி இந்திரா காந்தி சர்வ வல்லமை படைத்தவராக விளங்கினார். தனது ஆணைகள் அப்படியே மற்றவர்களால் பின்பற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் கொட்டிக் கிடந்தது. ஒரு காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தான் மீது உடனடியாக ராணுவ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கூற மானெக் ஷா நேரடியாக அவர் கண்களை பார்த்து முடியாது என்று மறுத்தாராம். அதற்கான சமயம் இது அல்ல என்று அவர் பளிச்சென்று கூறியதுடன் தான் கூறியதை பிரதமர் ஏற்கவில்லை என்றால் வேறு ஒருவரை தன் இடத்திற்கு நியமித்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
பத்து போட்டிகளில், மூன்றாவது முறையாக ஒரு அணி தான் அடித்த ஸ்கோரை டிபெண்டு செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க்து. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கமலேஷ் நாகர்கோட்டிக்குப் பதிலாக முஸ்தஃபீர் ரஹ்மானை தேர்வு செய்து சேஸ் செய்ய முடிவு எடுத்தது. குஜராத் டைட்டன்ஸில் யாதொரு மாற்றமும் இல்லை. அடுத்த போட்டியிலாவது டெல்லி அணிக்கு வார்னர், இங்கிடி களம் இறங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.
முஸ்தஃபீர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இருந்த இடத்தில் இருந்து அகஸ்மாத்தாய் குதித்து கீப்பரின் தலைக்கு மேல் பந்தை லாகவமாக திருப்ப நினைத்தார் மேத்யூ வேட். ஆனால் அதை பண்ட் எளிதாகப் பிடிக்க நாட் அவுட் என்றார் அம்பயர். ரிவ்யூ வரை சென்று முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்து குஜராத். பவர்ப்ளே இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது குஜராத்.
ஷுப்மன் கில்
பவர்ப்ளே முடியும்வரை பொறுமையாகக் காத்திருந்த விஜய் ஷங்கர், முடிந்ததும் வந்த முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். ஸ்வீட் ஷாட் அடிக்க முயற்சி செய்து, அது மிஸ்ஸாகி இன்சைட் எட்ஜாகி ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், ஷுப்மன் கில்லும் ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினார்கள். ஓவருக்கு ஒரு பவுண்டரி நிச்சயம், இரண்டு பவுண்டரி லட்சியம் என முடிவெடுத்து ஆடியதால் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்துகொண்டே இருந்தது. 32 பந்துகளில் அரைசதம் கடந்தார் கில். 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லாங் ஆனில் நின்றுகொண்டிருந்த பவலின் கைகளில் பந்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினார் ஹர்திக்.
அதுவரையில் பவுண்டரிகளில் டீல் செய்துகொண்டிருந்த கில், கில்லர் மில்லர் வந்ததும் சிக்ஸர்களை விளாச ஆரம்பித்தார். அதுவும் அக்சர் படேலில் பந்தில் அடித்தது எல்லாம் 83 மீட்டர்கள் வரை சென்றது. இந்த நாளில் பட்லரைத் தொடர்ந்து, ஷுப்மன் கில்லும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டீப் மிட்விக்கெட்டில் நின்றிருந்த அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன், ஐபிஎல் போட்டிகளில் கில் தன் அதிகபட்ச ஸ்கோராக 84 பந்துகளைப் பதிவு செய்தார். கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் விழ, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது குஜராத்.
ஹர்திக் பாண்டியா
குஜராத்துக்கு முதல் ஓவர் என்றால், டெல்லிக்கு இரண்டாவது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டனான ஹர்திக்கே பந்துவீச வந்தார். 'என்னடா இது ட்விஸ்ட்' என யோசித்தால், முதல் பந்திலேயே செய்ஃப்ரெட் அவுட். ஐந்தாவது ஓவரை வீச வந்தார் மீசைக்கார நண்பர் லோகி ஃபெர்குஸன். கடந்த போட்டியில் நல்ல துவக்கம் அளித்த பிருத்வி ஷாவை அவுட்டாக்கினார் லோகி. அதே ஒவரில் மந்தீப்பும் அவுட். கடந்த போட்டியில் 32 ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்த டெல்லி, இந்த முறை 34 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது. ரிஷப் பண்ட்டும், லலித் யாதவும் சீரான இடைவெளியில் ரன்களைக் குவித்துக்கொண்டு வந்தனர். பத்து ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது டெல்லி. விக்கெட் இருப்பதால் எட்டக்கூடிய இலக்குதான் என்றாலும், ஓவருக்கு பத்து ரன்கள் தேவைப்பட்டன.
விஜய் ஷங்கர் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு, இன்னொரு பந்தை சிங்கிளுக்குத் தட்டினார் ரிஷப் பண்ட். சரியான கம்யூனிக்கேசன் இல்லாததால், பாதி தூரம் வந்த லலித் யாதவ் மீண்டும் நான் ஸ்டிரைக்கர் எண்டுக்கு ஓடினார். விஜய் ஷங்கரோ பாலை வைத்து அடிப்பதற்கு முன்பாகவே காலை வைத்து ஸ்டம்பை உரசிவிட ஒரு பைல்ஸ் முன்னரே விழுந்துவிட்டது. அதன் பிறகு பந்தை வைத்து ஸ்டம்பில் அடித்து லலித் யாதவை அவுட் செய்தார்.
GT vs DC
பவலும், பண்ட்டும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்க மீண்டும் பந்துவீச வந்தார் லோகி. இந்த முறை முதல் பந்தில் அவுட்டானார் ரிஷப் பண்ட். செமயான ஃபீல்ட் செட்டப்புடன், மீண்டும் லோகியை பந்துவீச அழைத்தார் ஹர்திக் பாண்டியா. அந்த பந்தை எப்படி அடிப்பது என ஒரு கணம் யோசித்த பண்ட், தவறாக லெக் சைடில் அடிக்க, அதை எளிதாக கேட்ச் பிடித்தார் அபினவ். அதே ஓவரில் அக்சர் படேலும் இரண்டு பவுண்டரி அடித்துவிட்டு, கீப்பர் கேட்ச் முறையில் அவுட்டானார்.
கடைசி மூன்று ஓவர்களில் முப்பது ரன்கள் தேவை. பந்து வீச வந்தார் ஷமி. பவல் மற்றும் கலீல் அஹமதை அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி ஆட்டத்தினை குஜராத் வசப்படுத்தினார் அவர்.
GT vs DC
நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய லோகி ஃபெர்குஸன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ரன்களே போதாது என்கிற நிலையில் இருந்த கிரவுண்டில் 170 ரன்களை சேஸ் செய்யத் திணறியது டெல்லி. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது, டெல்லிக்கு இத்தொடரின் முதல் தோல்வியைப் பரிசளித்திருக்கிறது.