Ad

திங்கள், 22 ஜனவரி, 2024

``கூட்டணி முறிவால் கவலைப்பட வேண்டியது பாஜகதான்..!” - சொல்கிறார் பாமக திலகபாமா

`தி.மு.க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருக்க என்ன காரணமாக இருக்குமென நீங்கள் கருதுகிறீர்கள்..?”

``சமூக நீதி இயக்கம் எனச் சொல்லிக் கொண்டு சமூக நீதிக்கெதிராக செயல்படுகிறார்கள் என்பதற்கு இதுவொரு அடையாளம். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் தகுந்த டேட்டா குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பும் போது தி.மு.க அரசு நினைத்திருந்தால் அதனை 10 நாள்களில் கொடுத்திருக்க முடியும். அதேபோல் இதர மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது போல் இங்கும் நடத்தலாம். இரண்டையும் தேர்தல் நெருக்கத்தில் அறிவித்து வாக்காக மாற்றத்தான் பார்க்கிறார்கள்.”

சாதிவாரி கணக்கெடுப்பு

``சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம், 10.5% இட ஒதுக்கீடு அமல்படுத்த பாடுபடுவோம் என அ.தி.மு.க உறுதியளித்தால் கூட்டணி வைப்பீர்களா?!”

``மக்கள் பிரச்னைகளுக்கு நிற்போம் எனச் சொன்னால் போதாது. அதற்காக நம்பகத்தன்மையையும் அவர்கள் சேர்த்து தரவேண்டும். 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தை முன்னெடுத்தார்கள், அதையே ஆளுமையுடன் செய்திருந்தால் இப்போது இந்த பிரச்னையே வந்திருக்காது”

``2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது பா.ம.க?”

``அதனை எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்தான் முடிவெடுப்போம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் எதிரிகளும் கிடையாது என்பது என் கருத்து.”

அன்புமணி ராமதாஸ்

``சரி, அதிமுக - பாஜக கூட்டணி முறிவு.. யாருக்கு சாதகம்.. யாருக்கு பாதகம்?”

``இது அ.தி.மு.க-வுக்கு சாதகமாக மாறும், அவர்களுக்கு வாக்குகள் கூடும், இஸ்லாமியர்களின் வாக்குகளும் உள்ளே வரும். கவலைப்பட வேண்டியது பா.ஜ.க-தான்”,

வேல்முருகன்

``வேல்முருகன் மீண்டும் பா.ம.க-வோடு இணைந்து செயல்படத்தயார்... வி.சி.க-வும் பா.ம.க-வும் இணைந்து செயல்பட வேண்டும் என்றிருக்கிறாரே!”

``வேல்முருகனுக்கு எனது வாழ்த்துகள், வி.சி.க, பா.ம.க ஆகிய இயக்கங்களில் ஒருங்கிணைவு அவசியம் என்ற கருத்தில் உடன்படுகிறேன். பட்டியல் சமூக மக்களின் நலனுக்கானவர் மருத்துவர் ராமதாஸ். இப்போதும் அனைவருக்குமான தலைவராகத்தான் இருக்கிறார். அன்புமணியும் அதன்வழியில் தான் பயணிக்கிறார். அவர்கள் இருந்தால் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற வெறுப்புணர்வை காட்ட வேண்டிய அவசியத்தை தைலாபுரம் சொல்லிக் கொடுக்கவில்லை”

அன்புமணி ராமதாஸ் - திருமாவளவன்

``வரும்காலங்களில் வி.சி.க, பா.ம.க ஒருங்கிணைவு சாத்தியமாகுமா?”

``அப்படி நிகழ்ந்தால் மிகப் பெரிய வெற்றியை சமூகம் சந்திக்கும். அது நடந்துவிடக் கூடாதென சதி செய்கிறார்கள், அதன்விளைவுதான் வி.சி.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இடையே கண்ணுக்கு தெரியாத கோட்டுடன் பிரிந்து நிற்கிறோம், எங்களை சேரவிடாமல் சில அரசியல் சக்திகள் வேலை பார்க்கிறார்கள்” அது யார் என்பதை உங்கள் கணிப்புக்கே விட்டுவிடுகிறேன்”



source https://www.vikatan.com/government-and-politics/governance/bjp-that-should-be-worried-about-alliance-break-up-says-pmk-thilakabama

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக