Ad

வியாழன், 18 ஜனவரி, 2024

குஜராத்: 14 பேர் செல்லவேண்டிய படகில் 34 பேர் பயணம் - மாணவர்கள் சென்றபடகு கவிழ்ந்து 14 பேர் பலி

குஜராத் மாநிலம் வதோதரா அருகில் உள்ள வகோதியா என்ற இடத்தில் உள்ள நியு சன்ரைஸ் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 80 பேர் அங்குள்ள ஹர்னி என்ற இடத்திற்கு பிக்னிக் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஆசிரியர்கள் சிலரும் சென்றனர். அவர்கள் அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்ய முடிவு செய்தனர். வெறும் 14 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 34 பேர் ஏற அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் யாருக்கும் லைப் ஜாக்கெட் எதுவும் வழங்கப்படவில்லை. படகு ஏரியின் மைய பகுதியில் சென்றபோது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. மாணவர்கள் யாருக்கும் நீச்சலும் தெரியாது. படகு கவிழ்ந்தவுடன் மாணவர்கள் நீரில் தத்தளித்தனர். போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரே நேரத்தில் 34 பேர் நீரில் விழுந்ததால் அவர்களை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. பேரிடர் மீட்புப்படையினரும் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 18 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மீட்கப்பட்டனர். மற்ற 2 ஆசிரியர்கள் மற்றும் 12 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கிய மாணவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயது வரையுள்ளவர்கள் ஆவர். நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 10 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

படகு விபத்தில் இறந்த 12 வயது மாணவர் அயன் காந்தியின் சகோதரி நவுசின் காந்தி இது குறித்து கூறுகையில், ''மாணவர்களை வாட்டர் பார்க் அழைத்து செல்வதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.750 வாங்கினார்கள். ஆனால் வாட்டர் பார்க் அழைத்துச்செல்லாமல் படகு சவாரிக்கு அழைத்துச்சென்றுள்ளனர்'' என்று குற்றம் சாட்டினார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,''படகில் மாணவர்கள் ஏரியை சுற்றிப்பார்த்துவிட்டு கரைக்கு திரும்பி வரும் போது பாரம் தாங்காமல் கவிழ்ந்துவிட்டது'' என்றார். இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இறந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



source https://www.vikatan.com/crime/accidents/14-people-lost-their-lives-when-the-boat-carrying-students-capsized-in-gujarat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக