Ad

வெள்ளி, 19 ஜனவரி, 2024

விஜயகாந்த்: "கடைசி நாள்களில் அவருடைய பாட்டை அவரே கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்!" - விஜய பிரபாகரன்

மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்வு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய இவ்விழாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனத் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்தி அவரின் நினைவுகள் குறித்து மனம் திறந்து பேசினர்.

இந்நிலையில் இவ்விழாவில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கண்கலங்கியபடி பேசிய அவரின் மகன் விஜய பிரபாகரன், "சின்ன வயசுல இருந்து என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தது விட அப்பாவைத்தான் அதிகமாகப் பார்த்திருக்கேன். எனக்கு அப்பானா ரொம்ப எமோஷ்னல். கேப்டன் எங்கேயும் போகல. நம்ம கூடதான் இருக்கார். அப்பா போனதுக்கு அப்புறம் எந்த மீடியாவுலயும் பேசல.

விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம்

நடிகர் சங்கத்தின் முதல் ஃபங்கஷனாக இப்படியொரு நிகழ்வில் கலந்துக்குவேன்னு நினைக்கல. எங்க அப்பா கொடுத்துக் கொடுத்து பழகியிருக்கார். எங்க அப்பா உங்களுகாக எங்களை விட்டுட்டு போயிருக்கார். அப்பா கனவை நிறைவேற்றத்தான் நானும் சண்முகபாண்டியனும் இருக்கோம். எனக்கும் அப்பாவுக்கும் மட்டும் தெரிஞ்ச 2024 ரெசல்யூசனை இந்த வருடத்தில் உங்களுக்குச் சமர்ப்பணம் பண்ணுவோம்.

அப்பா கடந்த பத்து வருஷமா கஷ்டப்பட்டாங்க. கடைசி வரைக்கும் எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருந்தார். டிசம்பர் 26 வரைக்கும் 'ராசாத்தி உன்னை...' பாட்டு போட்டு ரசிச்சுட்டு இருந்தார். எங்க வீட்டு டிரைவர் அண்ணாகூட சேர்ந்து தாளம் போட்டுட்டு இருந்தார். அப்பாவுடைய கனவை நாங்க நிறைவேத்துவோம். சண்முகபாண்டியன் பெரிய ஹீரோவா வருவார்" என்று உருக்கமாகப் பேசினார்.



source https://cinema.vikatan.com/kollywood/vijayakanths-son-vijaya-prabhakaran-speech-at-the-remembering-captain-vijayakanth-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக