Ad

செவ்வாய், 23 ஜனவரி, 2024

Tamil News Live Today: ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் - கீழக்கரையில் முதல் ஜல்லிக்கட்டு!

கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கம் - இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். வாடிவாசல், ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், அருங்காட்சியகம், என பல்வேறு வசதிகளுடன் இந்த அரங்கம் தயாரகி உள்ளது.

ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்

திறப்பு விழாவோடு ஏறுதழுவுதல் அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. முதல் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். முதலிடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு தார் ஜீப் வழங்கப்படுகிறது. இரண்டாம் இடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு இரு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது.

ஏறு தழுவுதல் மைதானம்!

இதனை தொடர்ந்து மாதாமாதம் இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாவும் இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறது அரசு.



source https://www.vikatan.com/government-and-politics/tamil-news-live-today-live-updates-dated-24-01-2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக