`பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் களம் இறங்கிய அர்ச்சனா, டைட்டிலை வென்றார்.
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அழுகையுடன் சண்டைகள் பல போட்டாலும் தனக்கு நடக்கும் பிரச்னைக்களைத் தைரியமாக எதிர்கொண்டு பார்வையாளர்களின் மனதை கவர்ந்தார். பின்னர், தெளிவான வாதங்கள், கச்சிதமான நகர்வுகள், இனிமையான குரலில் பாடல்கள் என இதயம் கவர்ந்தார். தற்போது எதிர்பார்த்தபடி `பிக் பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டிலையும் வென்றுள்ளார். அவரைப் பற்றி சில சுவாரஸ்யமான விசயங்களை ஒரு ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.
அப்பா காலேஜ் புரொபசர். அதனாலயே வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். சின்ன வயசுல இருந்தே டிவி பார்த்து டிவியில் வர வேண்டுமென்கிற ஆசை அர்ச்சனாவிடம் இருந்தது. ஆதித்யா டிவியில் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு டப்ஸ்மாஷ் செய்தெல்லாம் கனவை நோக்கி நகர்ந்துள்ளார். `King, Queen of social media' போட்டியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார். பிறகு அதே ஆதித்யா தொலைக்காட்சியிலேயே ஆங்கராகி தனது தொலைக்காட்சி கனவில் அடியெடுத்து வைத்தார். பிறகு `ராஜா ராணி' சீசன் 2-வில் நடிகையாகவும் ஆனார். 21 வயதிலேயே துணிச்சலாக அண்ணி கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இதையடுத்து திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கினார். பிக்பாஸ் விட்டில் ஆரம்பத்தில் தனது சிக்கல்களுக்காக அழுத போது பலமுறை கேலி செய்யப்பட்டார். அதன்பிறகு அழுகையுடன் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயங்கினார். பின்னர், தைரியமாக தனக்குச் சரியாகப்பட்டதை தைரியமாகப் பேசத் தொடங்கினார்.
அது பார்வையாளர்களுக்கும் சரியென ஒத்துப்போக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். தன்னிடம் இருந்த குறைகளை எல்லாம் சரிசெய்து இன்று `பிக் பாஸ் தமிழ் சீசன் 7' நிகழ்ச்சியின் டைட்டிலை வென்று தனது கனவுப் பயணத்தில் பெரும் மைல்கல்லை எட்டி அடுத்தடுத்த வெற்றிகளுக்கு தயாராகியிருக்கிறார். வாழ்த்துகள் அர்ச்சனா...
source https://cinema.vikatan.com/television/bigg-boss-7-tittle-winner-archana-life-journey
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக