Ad

புதன், 3 ஜனவரி, 2024

Captain Miller: "நான் அடிக்கடி பார்க்கும் படம் 'புதுப்பேட்டை'" - நடிகர் சந்தீப் கிஷன்

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் பட விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

'மாநகரம்', 'மைக்கேல்' படங்களில் நடித்த சந்தீப் கிஷன், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தின் பட விழாவில் கலந்துகொண்டு பேசிய இவர், தனுஷ் குறித்தும் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.

கேப்டன் மில்லர் படத்தில் சந்தீப் கிஷன்

இதுபற்றி பேசிய சந்தீப் கிஷன், "நான் சினிமாவுக்குள்ள வரும்போது எனக்கு இன்ஸ்பிரஷனாக இருந்தது செல்வராகவன் சார் மற்றும் தனுஷ் அண்ணாதான். தனுஷ் அண்ணா மாதிரியாகணும்னுதான் எனக்கு ரொம்ப ஆசை. உங்களோட நம்பிக்கையைக் கண்டிப்பா இந்த படம் பூர்த்தி பண்ணும். நானும் அருண் மாதேஸ்வரணும் முன்னாடியே ஒரு படம் பண்ண பிளான் பண்ணோம். ஆனா, படத்துல ரொம்ப வன்முறை இருக்குனு பயந்தாங்க. இப்போ எனக்குப் பிடிச்ச நடிகரோட சேர்ந்து அருண் இயக்கத்துல நடிச்சுருக்கேன். எனக்குப் பர்சனலாக, கதையாக இது ரொம்பப் பிடிச்ச படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. நடிப்புக்காக அடிக்கடி 'புதுப்பேட்டை' படத்தை பார்ப்பேன்" என்று பேசியுள்ளார்.



source https://cinema.vikatan.com/kollywood/actor-sundeep-kishan-speech-at-captain-miller-pre-release-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக