பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றிருக்கிறார், அர்ச்சனா. பிக் பாஸ் 7வது சீசனின் கிராண்ட் ஃபைனல் வரை தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி ஆகியோர் வந்திருந்தனர். டாப் 3 -ல் மணி, அர்ச்சனா, மாயா என மூவர் முன்னிலை வகித்தனர். இதில் மாயா இப்போட்டியிலிருந்து இரண்டாவது ரன்னர் அப்பாக வெளியேறினார்.
அனைத்து சீசனிகளிலும் வெற்றியாளர்களின் கையை கமல் உயர்த்துவார். அந்த வகையில் மணியும் அர்ச்சனாவும் இறுதி நொடி வரை இருந்தனர். அதன் பிறகு கமல் விளையாட்டாக ஒரு கேமை நடத்தினார். இருவரின் கைகளையும் உயர்த்திப் பிடிக்காமல், யார் வெற்றியாளர் என மைக்கில் கேட்டுக் கொண்டே இருந்தார். சொல்லவில்லை என்றால் தான் இரு கைகளையும் உயர்த்திவிட்டு கிளம்பிவடுவதாகச் சொன்னார். பின், தனக்கே பிரஷர் ஆவதாகக் கூறி தனது ஹார்ட் பீட்டை மணியை செக் செய்ய வைத்தார். பிறகு சென்று கேட்டுவிட்டு வருவதாகக் கிளம்பி விட்டார்.
பிறகு விறுவிறுவென உள்ளே வந்தார் கமல். அந்தவொரு பரபரப்பான சூழலில் கமல் அர்ச்சனாவின் கையை உயர்த்தி வெற்றியாளரை அறிவித்தார். பிக் பாஸ் சீசன் 7-ன் டைட்டிலை அர்ச்சனா தட்டிச் சென்றிருக்கிறார். அர்ச்சனா சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் நடிகையாகவும் வலம் வந்தவர். குறிப்பாக 'ராஜா ராணி' சீரியல் மூலம் இவர் பெரிதளவில் பரிச்சயமானது.
இவர் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்க்குள் வந்தார், தற்போது டைட்டிலை வென்றிருக்கிறார். இதன் மூலம், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து டைட்டிலை தட்டிச் செல்லும் முதல் நபர் அர்ச்சனா என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
source https://cinema.vikatan.com/television/bigg-boss-7-tamil-tittle-winner-archana
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக