Ad

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

உலகக்கோப்பை 2011: தோனியின் அந்த ஒற்றை சிக்ஸர்... நூறு கோடி கனவுகள் நனவான நாள்!

வெற்றிக்கு தேவை 4 ரன்கள் மட்டுமே. 49-வது ஓவரின் இரண்டாவது பந்தை, வான்கடேவின் கார்வேர் எண்டில் இருந்து வீச தன் ரன்-அப்பைத் தொடங்குகிறார் இலங்கையின் குலசேகரா. ஃபுல் லென்த்தில் பிட்சாகிய அப்பந்தினை லாங்-ஆன் திசைக்கு மேல் தூக்கி அடிக்கிறார் தோனி. MCA பெவிலியனில் போய் விழும் அதை கொஞ்சமும் திரும்பி பார்த்திருக்கவில்லை நான்-ஸ்ட்ரைகர் என்டில் இருந்த யுவராஜ் சிங். வெற்றிக்களிப்பில் தன் இரு கைகளையும் அவர் ஏற்கெனவே தூக்கிக் கத்தத்தொடங்கியிருக்க, தன் கண்களை இன்னமும் பந்திலிருந்து அகற்றியிருக்கவில்லை தோனி. ஒரு மைக்ரோ செகண்டிற்கு மொத்த இந்தியாவும் உறைந்து போகிறது.

World cup -2011

எந்த ஒரு மிகப்பெரிய கனவு நனவாகும் போதும், அதை மெய்யாக்க நாம் உழைத்த உழைப்பு அனைத்தும் நம் கண் முன் வந்து போகும் அல்லவா, அந்த வெற்றியை நம்புவதற்கு, ஏற்பதற்கு, அனுபவிக்க தயாராவதற்கு ஒரு சிறிய கால அளவு தேவைப்படும் அல்லவா, அதற்குதான் அந்த ஒரு மைக்ரோ செகண்ட்.

கமெண்டரி பாக்ஸில் இருந்த ரவி சாஸ்திரி இச்சொற்களை சொல்லி முடிப்பதற்குள் அன்றைய இரவு வானம் மொத்தமும் வாணவேடிக்கைகளால் நிறைந்து இந்திய தேசமே நள்ளிரவு நேரத்தில் திருவிழா கோலமாகிறது.

World cup -2011

இந்த மேஜிக் அனைத்தும் நேற்று இரவு நடந்தது போல இருக்கிறதல்லவா, அதற்குள்ளாகவே 11 வருடங்கள் ஓடிவிட்டன. இரண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, இரண்டு சாம்பியன்ஸ் டிராபி, நான்கு டி20 உலகக்கோப்பை என இடைப்பட்ட காலத்தில் இத்தனைத் தொடர்களை ஆடிவிட்டது இந்திய அணி. உலக கிரிக்கெட் அரங்கின் அசைக்க முடியாத சக்தியாகக் கடந்த தசாபத்தில் இந்திய அணி பெற்ற வெற்றிகள் ஏராளம். ஆனால் அதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய ரசிகர்களுக்கு என்றைக்கும் ஸ்பெஷல்தான். இன்றும் கூட தோனியின் அந்தக் கடைசி சிக்ஸரை நம் கண்கள் காண, ரவி சாஸ்திரியின் வர்ணனை நம் காதுகளை எட்ட ஒரு விநாடிக்கு நம் மொத்த உடம்பும் மெய்சிலிர்த்துப்போவது நிச்சயம்.

ஆம், கபில் தேவிற்குப் பிறகு சுமார் 28 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த நூறு கோடி கனவுகள் நனவான நாள் இன்று ஏப்ரல் 2. 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி 2007இல் படுமோசமாக விளையாடி முதல் சுற்றோடு வெளியேறியது. ஆனால் சொந்த மண்ணில் நடக்கப்போகும் அடுத்த உலகப்கோப்பையை... அதுவும் முந்தைய தொடரில் அதிகம் விமர்சிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனியின் கரங்கள் ஏந்தப் போகின்றன என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

World cup -2011

காலிறுதியில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்து இறுதிப்போட்டியில் இலங்கையை சந்திக்க களமிறங்கியபோது இந்த முறை கோப்பையை எப்படியேனும் கைப்பற்றிவிடும் நம் அணி என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர் இந்திய ரசிகர்கள். இரு முறை டாஸ் போடப்பட்டு முதலில் பேட் செய்த இலங்கை அணியை நாற்பது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எனக் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர் இந்திய பௌலர்கள். ஆனால் ஜெயவர்தனாவின் அற்புத சதத்தாலும் டெத் ஓவர்களில் திசாரா பெரெரா அதிரடியாலும் 274 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு சவாலான டார்கெட்டை நிர்ணயித்தது இலங்கை.

அடுத்து பேட் செய்த இந்திய அணியின் சேவாக்கும் சச்சினும் அடுத்தடுத்து வெளியேற 2003-ம் ஆண்டின் ஃபிளாஸ்பேக் லேசாக திகில் கிளப்பியது. ஆனால் அதன் பிறகு நடந்தது எல்லாமே கிரிக்கெட் வரலாற்று பக்கங்களில் பொறிக்கப்பட்டவைதான். இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த கம்பீர் ஆடிய இன்னிங்க்ஸ் பெரிய அளவில் போற்றப்படாதது வருத்தமளித்தாலும் மறுமுனையில் தோனி அன்று செய்தது ஒவ்வொன்றுமே மேஜிக்தான். வெற்றிக்கு பின்னர் சச்சின் டெண்டுல்கரை இந்திய அணியினர் தோளில் சுமந்து சென்றதைக் கண்டு தங்களின் வாழ்நாள் பயனையே அடைந்துவிட்டதாக எத்தனையோ கிரிக்கெட் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். சச்சின், சேவாக், யுவராஜ், ஜாகிர் கான், ஹர்பஜன் என அன்றிருந்த ஜாம்பவான்கள் எவரும் இன்று அணியில்லை. ஐ.பி.எல் மட்டுமே ஆடி வரும் தோனியின் கிரிக்கெட் வாழ்வும் அஸ்தமனத்தில் உள்ளது. அன்றைய இறுதி ஆட்டத்தில் ஆடிய விராட் கோலி மற்றும் அஷ்வின் மட்டுமே இந்திய அணியில் இன்னமும் விளையாடி கொண்டிருக்கின்றனர்.

சச்சினை சுமக்கும் இந்திய அணி

வருடத்தின் ஏப்ரல் மாதம் வந்துவிட்டாலே 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை நினைவிற்கு வந்து அப்படியான ஒரு அணியை இனி நாம் திரும்பி எப்போது பார்க்கபோகிறோம் என ஏங்கதொடங்கிவிடுவான் இந்திய ரசிகன். இந்திய அணி இன்னொரு முறை, ஏன் இனி எத்தனை முறை உலகக்கோப்பையை வென்றாலும் அது 2011-ம் ஆண்டு இந்நாளில் தோனி அடித்த அந்த சிக்ஸருக்கு ஈடாகாது. நம் தலைமுறையினருக்கு பல மறக்கமுடியாத மிகச்சிறந்த நினைவுகளைக் கொடுத்ததும் அந்த ஒற்றை சிக்ஸர்தான்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் முன்னால் வீரர் சுனில் கவாஸ்கர் இப்படிக் கூறுகிறார்...



source https://sports.vikatan.com/cricket/the-day-that-fulfilled-1-billion-dreams-recap-of-2011-world-cup-final

`பொருளாதார நெருக்கடி... மக்கள் போராட்டம்..!' - இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

2019-ல் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சி இலங்கையில் அமைந்தபிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. அதனால் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அதில் வீழ்ந்த அந்த நாட்டின் பொருளாதாரம், தற்போது அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு, மக்கள் போராட்டம் என இலங்கை அரசுக்கு நாலாபக்கமும் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் பொருளாதாரமென்பது கிட்டத்தட்ட 80% பிற நாடுகளைச் சார்ந்தே இருப்பதால், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்துக்குக்கிடையில், இலங்கையின் பொருளாதாரமும் அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்களும் கூறிவருகின்றனர்.

இலங்கை

இதனால் பெட்ரோல், டீசல் தொடங்கி காகிதம் வரை அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் கடும் விலையுயர்வைச் சந்தித்துள்ளன. மேலும் நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 13 மணி நேரம் மின்தடையும் ஏற்பட இலங்கையில் சாமான்ய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்த நிலையில், இலங்கை அமைச்சரவையைக் கலைத்துவிட்டு காபந்து (தற்காலிக) அரசை அமல்படுத்த வேண்டும் என இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர கட்சி, இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய காங்கிரஸ், மற்றும் ஶ்ரீலங்கா மகாஜன கட்சி உள்ளிட்ட 11 கூட்டணிக் கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வலியுறுத்தின.

போராட்டக்காரர்களை இழுத்துச்செல்லும் இலங்கை அவசர படையினர்

அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி (நேற்றிரவு) முதல் இலங்கையில் அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/gotabaya-rajapaksa-declares-state-of-emergency-in-emergency

`பாலைநிலத்தில் துளிர்க்கும் பச்சையம்' - அழிவிலிருந்து நாடகக் கலைஞர்களை மீட்க ஒரு விழா!

தமிழ் நிலத்தில் நாடகங்களுக்கென்று தனி வரலாறு உண்டு. தொல்காப்பிய காலத்தில் தொடங்கிய பாரம்பரியம் இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக தொக்கி நிற்பதைக் காணும் போது, அழிந்து வரும் கலையின் எச்சம் குறித்த துயரத்தை நம்மால் காண முடிகிறது.

பாலை நிலத்தில் அரிதாக முளைக்கும் தாவரம் போல எங்காவது நாடகத்துக்கென்று ஒன்றிரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு அரிதான நிகழ்வை திணைநிலவாசிகள் அமைப்பு ‘காட்லா கலைத்திருவிழா’ என்கிற பெயரில் தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். மார்ச் 27 அன்று முழு நாள் நிகழ்வாக நடந்த இந்தக் கொண்டாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

கலைஞர்கள் உடன் திணைநிலைவாசிகள் குழு

இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் பஹுவிடம் பேசினோம். ஏன் இந்த திருவிழாவுக்கு ‘காட்லா’ எனப் பெயரிடப்பட்டது என்பதில் இருந்து தொடங்கினார், “காட்லா என்பது தெற்கு ஐஸ்லாந்தில் இருக்கும் ஒரு எரிமலையின் பெயர். குளிர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரே எரிமலை இதுதான். இந்த எரிமலை கடைசியாக வெடித்து 105 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இது ஒருவேளை வெடித்தால் உலகமே அழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். அது போல நம்முடைய பாரம்பரிய நாட்டார் கலைகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டால் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் நேரும் என்பதை குறிக்கும் விதமாக இந்தப் பெயரில் விழா நடத்துகிறோம்.”

தொடர்ந்து நான்காவது வருடமாக இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கும் திணைநிலைவாசிகள் அமைப்பு, இந்த ஆண்டு திருவேங்கடம் என்கிற ஊரைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னாலும் ஒரு காரணம் உண்டு. “பாவலர் ஓம் முத்துமாரி இடைநிலை சமூகத்தில் இருந்து கலைத்துறைக்கு இடம்பெயர்ந்தவர். நாட்டார் கலைகளான பேயாட்டம், கிழவியாட்டம், கோமாளியாட்டம் என ஊர் ஊராகச் சென்று சமூக பிரச்னைகள் குறித்த பாடல்களை இயற்றி மக்களிடம் சாதிய ஏற்றத்தாழ்வு குறித்து விழிப்புணர்வு செய்து வந்தவர். வரகணி கூத்து என்று புதுவித கலையை உருவாக்கிய மேதை அவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைக்காகவும் மக்களுக்காவும் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த முத்துமாரி ஐயா 2013-ல் மறைந்துவிட்டார். அவரின் நினைவாகவே இந்த முறை விழாவை அவரது ஊரில் நடத்தத் திட்டமிட்டோம்.”

சிலம்பாட்டம்

விழாவில் என்ன நடந்தது?

“மார்ச் 27 உலக நாடக தினம். அன்றைக்கு மக்கள் மத்தியில் பணியாற்றி வரும் கலைஞர்களை மேடையேற்றி அவர்களுக்கு உரிய கௌரவமும் சிறிய பணத்தொகையும் ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறோம். 2019-ம் ஆண்டு ‘முதல் காட்லா கலைத்திருவிழா’ சென்னையில் நடந்த போது ஓம் முத்துமாரி அய்யா உடன் பணியாற்றிய சக கலைஞர் சந்தானத்தை அழைத்து வந்து அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் வழங்கி கௌரவித்தோம். இந்த ஆண்டு 5 மூத்த கலைஞர்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கி அழகு பார்த்திருக்கிறோம்” என்கிறார் பஹு.

நாடகச் சங்கமம்

500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஓரிடத்தில் கூடும் போது அந்த இடம் எப்படி இருக்கும். அப்படி காட்லா கலைவிழா நடந்து முடிந்திருக்கிறது. ஒரு நாள் முழுக்கத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளால் மக்களை மகிழ்வித்திக்கிறார்கள் கலைஞர்கள்.
ஒருங்கிணைப்பாளர் பஹு

நய்யாண்டி மேளம், கரகாட்டம், சிலம்பாட்டம், கிழவியாட்டம், இன்னிசை கச்சரி, நவீன நாடகங்கள் என 12 மணிநேர நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு போக்குவரத்து செலவு முதல் விழாவில் பங்கேற்றதற்கான சம்பளம் வரை மக்களை மகிழ்விப்பவர்களை மகிழ்வித்து அனுப்பி வைத்திருக்கின்றனர் குழுவினர். “நாடக சங்கமம் என்றே இந்த விழாவைச் சொல்லலாம்” எனத் தொடர்கிறார் பஹு, “இது போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் கலையைப் பற்றிக்கொண்டிருக்கும் மூத்த கலைஞர்களையும் நாடகத்துறையில் பயின்று வரும் மாணவர்களையும் ஒருங்கிணைத்து பரஸ்பரம் இருவரும் கற்றுக்கொள்ளும் வெளியை உருவாக்குவதே இந்த விழாவின் நோக்கம். ஓரளவு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்.”

கலைஞர்களைக் கௌரவித்தல்

இந்த விழாவில் தொடங்கப்பட்ட பாவலர் முத்துமாரி அறக்கட்டளை உதிரிகளாகப் பரந்துச் செயல்படும் நாடகக் கலைஞர்களுக்கு அரசின் உதவி உள்ளிட்ட தகவல்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விளிம்பு நிலை நாடகக் கலைஞர்களின் குடும்பத்துக்குத் தேவையான மருத்துவ உதவி, கல்வி உதவி உள்ளிட்டவற்றுக்காக ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையை விழா நாள் அன்று எழுத்தாளர் கோணங்கி தொடங்கி வைத்தார்.

2500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கண்டுகளிக்க கோலாகலமாகக் கொண்டாடி முடிக்கப்பட்டது ‘காட்லா கலைக்குழு விழா’. இந்த விழாவின் செலவு முதற்கொண்டு எல்லாமும் தன்னார்வலர்களாக இணைந்து நடத்தியதுதான். பாரம்பரியக் கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்க இது போலான சிறு சிறு விழாக்கள்தான் காரணம். நம்பிக்கை, பச்சையம் போல துளிர்விடுவதைக் காண முடிகிறது.



source https://www.vikatan.com/arts/miscellaneous/a-story-about-katla-drama-festival

``என் புருஷனை 11 வருஷம் படுக்கையில வெச்சு..!" - Actress Anuradha's Emotional Story



source https://cinema.vikatan.com/celebrity/actress-anuradha-shares-secret-of-silk-smitha-s-death

வளர்த்தவர்களின் இறப்பு; Separation Anxiety-க்குப் போன Dog! Emotional Story | Pet Love



source https://www.vikatan.com/news/animals/dog-suffers-from-anxiety-due-to-its-owners-death

KKR vs PBKS: வான்கடேவில் வீசிய ரசல் புயல்; பள்ளத்தில் பம்மி பதுங்கிய பஞ்சாப்!

இத்தொடரில், பெரும்பாலும் டாஸும் பனிப்பொழிவுமே கைகோர்த்து போட்டியின் முடிவை இறுதி செய்கின்றன என்பதாலும், எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அவற்றின் தாகம் தீருவதில்லை என்பதாலும் 'பௌலிங்கே பலம்' என்னும் வியூகத்தோடு ஆறாவது, ஏழாவது பௌலிங் ஆப்சன்களோடு போட்டியை அணிகள் அணுகத் தொடங்கிவிட்டன.

ரபாடா என்ட்ரி பஞ்சாப்புக்கு பலம் சேர்த்திருக்க, கடந்த போட்டியில் ஷெல்டன் ஜாக்சன் நிகழ்த்திய விக்கெட் கீப்பிங் வித்தைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து இன்னொரு பௌலிங் ஆப்சனாக ஷிவம் மவியைச் சேர்த்து சாம் பில்லிங்ஸிற்கு க்ளவுஸினை மாட்டி விட்டிருந்தது கேகேஆர்.
உமேஷ் யாதவ் | KKR vs PBKS

பவுன்ஸாகும் பிட்ச்தான் என்றாலும் ஃப்ளாட் டிராக்காக வான்கடே பேட்ஸ்மேனுக்கும் நேசக்கரம் நீட்டும். தவான் - அகர்வால் கூட்டணி, கடந்த சிஎஸ்கே போட்டியில் நடந்ததுபோல் ரன்களை பவர்பிளேவுக்கு உள்ளாகவே வாரிக் குவிக்கும் என்பது முன்னதாக அனுமானிக்கப்பட்டது. உத்தேசங்கள் உடைக்கப்பட்டன முதல் ஓவரிலேயே! அட்டகாசமான நியூபால் பௌலராக இந்த சீசனில் விக்கெட் கல்லா கட்டும் உமேஷோடு ஸ்ரேயாஸ் தொடங்க அவுட்ஸ்விங்கரோடு உமேஷ் தொடங்கினார்.

பெரும்பாலான பந்துகளை பேக் ஆஃப் லெந்த்தில் வீசியவர், கடைசிப் பந்தை ஃபுல் லெந்த்தில் அவுட் ஸ்விங்கராக அனுப்ப, அதை அகர்வால் கணிப்பதற்குள் பந்து அவரது பேடை நலம் விசாரித்து எல்பிடபிள்யூவாக்கியது. முதல் ஓவர் விக்கெட்டுக்கும் உமேஷுக்குமான பிரிக்க முடியாத பந்தம் இத்தொடரில் அப்படியே நீடிக்கிறது. ஐபிஎல்லில் பவர்ப்ளேயில் இது அவரது 50-வது விக்கெட், இதுவரை மூன்று பௌலர்கள் மட்டுமே இச்சாதனை சாலையில் பயணித்திருக்கின்றனர்.

பனுகா ராஜபக்ஷ | KKR vs PBKS

அந்த விக்கெட்டுக்குப்பின் 100 ரன்களுக்குள் பஞ்சராகாமல் பஞ்சாபின் வண்டியை ஓட்டிச் செல்ல வைப்பதாக அமைந்தது அடுத்ததாக வந்த பனுகா ராஜபக்ஷவின் ஆட்டம். 9 பந்துகள் ஆயுட்காலம்தான் அவரது இன்னிங்க்ஸ் நீடித்தது என்றாலும் ஓவருக்கொரு பவுண்டரி அடித்து அழுத்தத்தை ஏற்றினார். இலங்கை வீரர்களில் யாரோ ஒருவர் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கமாக மாறியுள்ளது. கடந்த போட்டி, ஷிவம் துபேயின் பந்துகள் சேதாரமடைவதைப் பார்த்ததென்றால் இப்போட்டியில் ஷிவம் மவியினை ஹாட்ரிக் சிக்ஸரோடு திக்குமுக்காடச் செய்தார் ராஜபக்ஷ. கவுன்டர் அட்டாக்காக லெந்த்தை மாற்றி அதிவேகமாக ஒரு ஷார்ட் பாலை மவி அனுப்ப அது மிட் ஆஃபில் நின்ற சவுத்தியிடம் கேட்சாகி 344.44 ஸ்ட்ரைக்ரேட்டோடு மிரட்டியவரை வெளியேற்றியது.

பவர்ப்ளேயின் கடைசி ஓவரும் கேகேஆரை ஏமாற்றாமல் சவுத்தி வீசிய ஆஃப் கட்டர் தவானையும் ஆஃப் செய்து வெளியேற்றியது. அப்போது ரன்ரேட் 10.33 என்றாலும், மூன்று விக்கெட்டுகள் என்பதும், பஞ்சாப்பின் மிடில் ஆர்டர் பலவீனமும், அங்கிருந்து போட்டி நகர உள்ள திசையை வெளிச்சமாக்கின. நங்கூரமிட்டு போட்டியைக் கட்டுக்குள் வைக்க வேறெந்த பேட்ஸ்மேனும் முயலவேயில்லை. அல்லது முயன்றவர்களை ஸ்ரேயாஸும் அவரது பௌலர்களும் விடவேயில்லை. எழ எழ அடிப்பது சிலரது பாணி என்றால் எழவே விடாமல் அடித்தது ஸ்ரேயாஸின் பாணியாக இருந்தது.

மூன்று விக்கெட்டுகள் விழுந்த மொமெண்டத்தை அப்படியே தக்க வைக்க உமேஷை அவர் கொண்டுவர ஃபுல் லெந்த்தில் வந்த பந்தை சிக்ஸராக்க முயன்று கேட்ச் கொடுத்து லிவிங்ஸ்டன் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே இரக்கமேயில்லாமல் நரைனின் ஆஃப் பிரேக் கொஞ்சமாக செட்டில் ஆகத் தொடங்கியிருந்த ராஜ் பாவாவையும் காலி செய்தது. 85 ரன்கள் என்றாலும் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை எடுத்து அங்கேயே வெற்றிக்கொடி நாட்டத் தொடங்கியது கேகேஆர்‌.
டிம் சவுத்தி | KKR vs PBKS

அந்தப் புள்ளியிலிருந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை ஏதோ மாயவிசைக்குக் கட்டுப்பட்டதைப் போல கேகேஆர் பௌலர்கள் வீழ்த்திக் காட்டினர். ஜக்லிங் செய்வது போல ஸ்பின்னர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களையும் மாற்றி மாற்றி விக்கெட்டுகளை அள்ளினார் ஸ்ரேயாஸ். கடந்த போட்டியிலேயே இந்திய கேப்டன்ஷிப் ரேஸில் தானுமிருப்பதைப் பதிவு செய்த ஸ்ரேயாஸ் இப்போட்டியில் அதனைத் தனது சமயோசித பௌலிங் மாற்றம் மற்றும் ஃபீல்ட் செட்அப் மூலமாகவும் உறுதி செய்துள்ளார். ஷாருக்கானை சவுத்தி அனுப்பியதும், உமேஷை இறுதி ஓவருக்காக ஹோல்டில் போடாமல் 15-வது ஓவரை அவர் வீசவைக்க, ஹர்ப்ரீட் மற்றும் ராகுல் சஹார் என இரண்டு விக்கெட்டுகள் அவர்கள் வசம் சேர்ந்தன.

இறுதியாக ரபாடா மட்டுமே அட்டாக் செய்து 25 ரன்களைச் சேர்த்து கொஞ்சமாக ஆட்டம் காட்டினார். அவருக்கு ஸ்லோ பால் ஒன்றால் ரசல் திட்டம் தீட்ட, அதை ரபாடா உயரத்தில் தூக்கியடித்தார். அதை பவுண்டரி லைனின் பக்கத்தில் இருந்த சவுத்தி பல அடிகள் ஓடிவந்து, தரையில் பந்தை நோக்கி சறுக்கிச் சென்று நம்ப முடியாத கேட்சைப் பிடித்தார். கில் தொடரின் ஆரம்பத்தில் பிடித்த அற்புதமான கேட்சுக்கே டஃப் பைட் கொடுத்தது இந்தக் கேட்ச். இறுதியாக அடுத்த பந்திலேயே அர்ஷ்தீப்பும் ரன்அவுட் ஆக, மீதமிருந்த பத்து பந்தைக்கூட அடிக்க ஆளின்றி 137-க்கு ஆல்அவுட் ஆனது பஞ்சாப். ஃபீல்டர்களின் பேருதவியால் அட்டகாசமான ஒரு பௌலிங் ஷோவை நடத்திக் காட்டியிருந்தது கேகேஆர்.

ரபாடாவின் நான்கு/ஐந்து விக்கெட் ஹாலோ, ராகுல் சஹாரின் சுழல் சாமர்த்தியமோ ஏதோ ஓர் அதிசயம் நடந்தால் மட்டுமே, பஞ்சாப்பால் பள்ளத்திலிருந்து மீண்டெழ முடியும் என்னும் நிலையில்தான் இரண்டாம் பாதி தொடங்கியது.
ராகுல் சஹார் | KKR vs PBKS

ரபாடா கைவிடவில்லை. தனது 'பஞ்சாப் நாள்களில்' வீசிய முதல் ஓவரிலேயே ரஹானேவை வெளியேற்றி அந்த கிக் ஸ்டார்ட்டைக் கொடுத்தார். முதல் போட்டியில் அடித்த 44 ரன்கள் மட்டுமே இன்னமும் ரஹானேயின் அடையாளமாக இருக்கிறது. மற்ற இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில்தான் அவர் வெளியேறியுள்ளார். விமானம் டேக் ஆஃப் ஆகும்போது நேரும் ஆரம்பகட்ட ஜெர்க்தான் இது, அடுத்த பார்ட்னர்ஷிப்கள் ரன்களை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட, பஞ்சாப் விக்கெட்டுகளை வாரிக் குவித்துக் கொண்டது.

ஸ்ரேயாஸுக்கும் வெங்கடேஷுக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப் வெகுநேரம் நீடிக்கவில்லை. பஞ்சாப்புக்குத் தேவையான திருப்புமுனையை ஓடியன் ஸ்மித் கொண்டு வந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த பந்தை வெங்கடேஷ் தூக்கியடிக்க, அது பவுண்டரி லைனுக்கு சற்று முன்னதாகவே தரையில் இறங்கி ஹர்ப்ரீத்தால் பிடிக்கப்பட்டது. மூன்று போட்டிகளில் 29 ரன்கள் என அவரது மோசமான ஃபார்ம் தொடர்கிறது. பவர்ப்ளேவுக்குள் இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் அப்பொழுதும்கூட தேவைப்படும் ரன்ரேட் 6.21 என்பது கேகேஆர் டேஞ்சர் ஜோனின் விளிம்பில்கூட கால் வைக்கவில்லை என்பதையே உணர்த்தியது.

ஆனாலும், துளிர்விட்ட பஞ்சாப்பின் நம்பிக்கையைச் சற்றே உயிர்க்க வைத்தது ராகுல் சஹாரின் ஒரு ஓவர். மும்பைக்குக் கடந்த சீசன்களில் மிடில் ஓவர்களில் கேம் சேஞ்சராகக் கைகொடுத்தவர் ராகுல் சஹார். ஸ்பின்னுக்குக் கைகொடுக்காத மைதானங்களிலும் பெரிதாகச் சாதிக்கக் கூடியவர். இந்த சீசனிலும் அவரது வெற்றிநடை தொடர்கிறது. தனது ஸ்பெல்லின் முதல் ஓவரையே இரண்டு விக்கெட்டுகளோடு மெய்டனாக மாற்றியிருந்தார் ராகுல் சஹார். ஸ்ரேயாஸ் தனது விக்கெட்டை வேண்டி விரும்பி தியாகம் செய்திருந்தார். லெக் ஸ்பின்னர் அவரது விக்கெட்டை எடுப்பது இத்தொடரில் இது இரண்டாவது முறை. கேகேஆருக்கு அதிர்ச்சியளிக்க, ராணாவின் விக்கெட்டும் அதே ஓவரில் வந்து சேர்ந்திருந்தது.

ரசல் | KKR vs PBKS

நான்கு விக்கெட்டுகளை இழந்ததால், அழுத்தம் மொத்தமாக கேகேஆரின் பக்கம் ஏற, அதை அடக்க 'ரசல் ஷோ' ஆரம்பமானது. மும்பைக்கு பொல்லார்ட், சிஎஸ்கேவிற்கு பிராவோ என்றால் கேகேஆரிற்கு ரசல்தான். ஆல்ரவுண்டராக போட்டி முழுமையிலும் தனது சாம்ராஜ்யத்தைக் கட்டமைப்பவர் ரசல். சமீப காலமாக அவரது ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. 'பழைய ரசல் இவரில்லை' என விமர்சனம் எழுந்தது. அதுவும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அவரது காஸ்ட்லி ஓவர்கள் வெற்றி வாய்ப்பினை மொத்தமாக ஆர்சிபி பக்கம் மாற்றி எழுதியது. அது எல்லாவற்றையும் மாற்றுவது போல இப்போட்டியில் இரண்டு விஷயங்கள் அமைந்தன. அவரின் இரண்டு விக்கெட்டுகளும், 31 பந்துகளில் அவர் எடுத்த 70 ரன்களும் ஆட்டத்தை முற்றிலுமாக கொல்கத்தா பக்கம் திருப்பின.

பில்லிங்ஸ் - ரசல் கூட்டணி, செட்டில் ஆக ஓரிரு ஓவர்கள் எடுத்துக் கொண்டாலும் அதன்பிறகு அம்பயருக்கு வேலை வைப்பது போல் ஒவ்வொரு ஓவரிலும், ஒவ்வொரு பந்திலும் தங்களது பெயர்களை எழுத வைத்தனர். குறிப்பாக ரசல், 'வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரைக் கேட்டாலே அடிப்பேன்' என்ற மோடில் இருந்தார். ஓடியன் ஸ்மித்தின் எக்கானமி பொதுவாகவே 10-ஐ சுற்றித்தான் பயணிக்கும். அதனை இன்று 20-க்கு எகிற வைத்து ஒட்டுமொத்த பௌலிங் படைக்கும் மூடுவிழா நடத்திவிட்டார் ரசல். ஓடியன் வீசிய 12-வது ஓவரிலேயே போட்டி முடிந்துவிட்டது. அதில் ரசல் அடித்த இரண்டு சிக்ஸர்களும் சரவெடிதான்.

'குறைவான இலக்குதான், மெதுவாக ஆடுவோம்' என்றில்லாமல், கடந்த போட்டியில் வாங்கிய அடியின் வலியின் வெளிப்பாடாக, இலக்கை வெகுவிரைவில் எட்டி விடவேண்டுமென்ற வெறி அவரிடம் இருந்தது. உடனிருந்த பில்லிங்க்ஸ் சப்போர்டிங் ரோல் செய்ததே போதுமானதாக இருக்க, 15-வது ஓவரிலேயே போட்டியை முடித்துவைத்தார் ரசல்.

சாம் பில்லிங்ஸ், ரசல் | KKR vs PBKS

லோ ஸ்கோரிங் போட்டியாக இருந்தாலும், ஒரு பக்கமாக நகராமல் சுவாரஸ்யமானதாக மாறப் போகிறதென்ற எதிர்பார்ப்பை அடுத்தடுத்து விழுந்த நான்கு விக்கெட்டுகள் ஏற்படுத்த, அதனை ஏழே ஓவரில் சுக்குநூறாக்கிவிட்டார் ரசல். அதில் ஏமாற்றம்தான் என்றாலும், வெகு நாள்களுக்குப் பின் காணக்கிடைத்த ரசலின் விஸ்வரூபம் ரசிகர்களை பிரமிப்பின் உச்சத்தை எட்டவைத்தது.

ஆரஞ்ச் மற்றும் பர்ப்பிள் கேப்களை கிரீடமாகச் சூடி, டேபிள் டாப்பராக (தற்காலிகமாக) சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது, கேகேஆர். மறுபுறம், பஞ்சாப் தனது பேட்டிங் படையின் தரம் மற்றும் நீளத்தை பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டிய தருணமாக இந்த முடிவு மாறியுள்ளது.


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-kolkata-storm-russell-takes-down-the-punjab-kings-at-wankhede

இன்றைய ராசி பலன் | 02/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.



source https://www.vikatan.com/spiritual/astrology/02042022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan