Ad

ஞாயிறு, 3 ஜூலை, 2022

Kaali பர்ஸ்ட் லுக் சர்ச்சை; `இந்தக் காளி இன்னும் பேசுவாள்'- விளக்கம் கொடுத்த இயக்குநர் லீனா மணிமேகலை

சுயாதீன திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை `செங்கடல்', `மாடத்தி' போன்ற தன் படங்களால் கவனம் பெற்றவர். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள தனது டாக்குமென்டரியின் பர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு சிலர் கண்டனம் தெரிவித்து, `arrest leena manimekalai' என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து லீனா மணிமேகலையிடம் பேசினோம்.
Leena Manimekalai

“காளி - வேட்டை சமூகங்களோட கடவுள். ஊருக்கொரு பிடாரி, ஏரிக்கொரு அய்யனார்னு சொலவடை உண்டு. நம்மூர்ல பச்சைக்காளி, பவளக்காளி, கருங்காளின்னு பிடாரி தெய்வமா,முத்தாரம்மன் கோயில்கள்ல குலசேகரப்பட்டணங்களில் - காளியை பார்க்கலாம். அந்தக் காளி டோரோண்டோ நகரத்தில வலம் வந்தா என்ன நடக்கும்னு செய்து பார்த்தது தான் என்னுடைய `காளி' படம்.

உலகத்திலேயே அதிக குடியேற்றம் நடக்கிற நகரம் டோரோண்டோ. கிட்டத்தட்ட எல்லா இனங்களும் வாழற ஊர் இது. இங்க இருக்கிற `யோர்க் பல்கலைக்கழகம்' ஒவ்வொரு வருஷமும் ஒரு சர்வதேச திரைப்பட இயக்குநரை தேர்ந்தெடுத்து முழு உதவித்தொகை கொடுத்து வரவழைச்சு மேலதிக பயிற்சியை எடுத்துக்கொள்ற வாய்ப்பையும் மாஸ்டர்ஸ் டிகிரியையும் வழங்குது. 2020-ம் வருடமே என்னைத் தேர்தெடுத்தருந்தாலும் pandemic, #metoo defamation case அடிப்படையில் பாஸ்போர்ட் முடக்கம் - பிறகு அந்த வழக்குகளை முறியடிக்க போராட்டம்னு பல காரணங்களால தள்ளிப்போய் 2022-ல தான் கனடா வர முடிஞ்சுது.

KAALI

கனடா முழுக்க சினிமா படிக்கிற மாணவர்கள்-ல சிறந்தவர்கள் சிலரை தேர்தெடுத்து கனடா நாட்டின் பன்முக கலாசாரத்தை பற்றிய படங்களை எடுக்கிற முகாமில் பங்கெடுக்க `டோரோண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்' அழைப்பு விடுத்தது. அந்த முகாம்ல கலந்துக் கொண்டு என் பங்களிப்பா நான் எடுத்த படம் தான் `காளி'. காளியா நடிச்சி இயக்கி தயாரிச்சிருக்கேன்.

ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தா `arrest leena manimekalai' ஹேஷ்டேக் பதிவிடாம `love you leena manimekalai' ஹேஷ்டேக் பதிவிடுவாங்க. அவ்வளவு இன வேற்றுமைகளுக்கு மத்தியிலும் வெறுப்பை தேர்ந்தெடுக்காம நேசத்தை தேர்ந்தெடுக்கிறதைப் பற்றிப் பேசறா இந்தக் காளி. இன்னும் பேசுவாள்.” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/cinema/film-maker-leena-manimekalai-clarifies-about-her-new-documentary-kaali

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக