Ad

திங்கள், 11 ஜூலை, 2022

``அதிமுக-வில் நடக்கும் சண்டைக்கும் திமுக-வுக்கும் தொடர்பில்லை” - ஆர்.எஸ் பாரதி

அதிமுகவின் பொதுக்குழுவால் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அதிமுக தலைமையகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இந்தநிலையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய இ.பி.எஸ், ``அதிமுக தொண்டர்கள் சராமாரியாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். வேண்டுமென்று திட்டமிட்டு ஸ்டாலின் அரசும், அவருடன் உறவு வைத்திருந்த அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ம் இணைந்து இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றார்.

ஓபிஎஸ் - இபிஎஸ்

இந்தநிலையில், இது தொடர்பாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ``அதிமுக-வுக்குள் நடக்கும் சண்டைக்கும், திமுக-வுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. தேவையில்லாமல் திமுகவை வம்புக்கு இழுக்க கூடாது. திமுக-வுக்கும், அவர்களுடைய பொதுக்குழுவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இபிஎஸ் பல கோடி ரூபாய் செலவழித்து இந்த பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார். இபிஎஸ் எப்படி பொதுக்குழுவை கூட்டினார் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்போதைய அதிமுக பிரச்னையை தற்காலிகமானதாகவே கருதுகிறேன். அவர்கள் இந்த நிகழ்வையையும் கூட மறக்கக்கூடும். எதற்கெடுத்தாலும் திமுகவை தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rs-bharathi-press-meet-in-chennai-regarding-admk-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக