Ad

வியாழன், 15 ஏப்ரல், 2021

கரூர்: விஷம், தூக்கு; நள்ளிரவில் இருவர் தற்கொலை! - திருமணம் தாண்டிய உறவு காரணமா?

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நல்லாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ஆறுமுகம் (வயது 30). இவருக்கு திருமணமாகி 27 வயதில் மனைவி உள்ளார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆறுமுகம் அப்பகுதியில் மாடு வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவபாக்கியம் (வயது 28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், ஆறுமுகத்துக்கும், சிவபாக்கியத்துக்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆறுமுகம்

இதனை அறிந்த ஆறுமுகம் மனைவி , ஆறுமுகத்தை கண்டித்தாக கூறபடுகிறது. இதனால், ஆறுமுகம், சிவபாக்கியம் இருவரும் நேற்று இரவு சந்தித்து, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதற்காக, கையோடு வாங்கி போயிருந்த விஷ மருந்தை உட்கொண்டனர். இதில், சிவபாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைப் பார்த்த ஆறுமுகம், விஷம் குடித்தும் தனக்கு உயிர் போகவில்லை என சிவபாக்கியத்தின் துப்பட்டாவை எடுத்து, அதை தனது வேட்டியுடன் இணைத்து, அதைகொண்டு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையில், ஆறுமுகத்தின் மனைவி கணவர் இரவு வீடு திரும்பாததால், அக்கம்பக்கத்தில் உறவினர்கள் உதவியுடன் தேடி பார்த்துள்ளார். அப்போது, அங்கிருந்த வயல்வெளி ஒன்றில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான அவர்களின் உறவினர்கள் தோகைமலை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தற்கொலை செய்துகொண்ட சிவபாக்கியம்

அதிகாலை 3 மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை காவல் நிலைய போலீஸார், தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த 2 பேர் உடல்களையும் மீட்டனர். அதோடு, உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு இரண்டு பேரின் உடல்களையும் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தோகைமலை காவல் நிலைய போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/karur-men-and-women-suicide-in-relationship-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக