இன்றைய பஞ்சாங்கம்
நாளை 16.4. 21 சித்திரை மாதம் 3 ம் நாள் வெள்ளிக்கிழமை. இன்றைய திதி மாலை 4.21 வரை சதுர்த்தி பிறகு பஞ்சமி. நட்சத்திரம் இரவு 9.50 வரை ரோகிணி பிறகு மிருகசீரிடம். இன்றைய யோகம் மரணயோகம் இரவு 9.50 வரை பிறகு சித்தயோகம் என்பதால் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்க்கலாம்.
ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம்: காலை 9.30 முதல்10.30 வரை
பகல் 4.30 முதல் 5.30 வரை
இன்று சதுர்த்தி விரதம் ஆதலால் நாம் வழிபடவேண்டிய தெய்வம் விநாயகப் பெருமான்.
குலதெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
நம் வாழ்வின் பிரச்னைகள் ஏற்படும்போது அவை ஏன் நிகழ்கின்றன என்று யோசிப்பதைவிட அவற்றை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசிப்பதுதான் சிறந்தது என்பார்கள் ஞானிகள். நம்மில் பலரும் நம் பிரச்னைகளுக்காக ஜோதிடர்களை அணுகிக் காரணம், பரிகாரம் கேட்பதுண்டு. அப்போது பல ஜோதிடர்கள் குலதெய்வ வழிபாட்டையே பரிகாரமாகக் கூறுவர். இந்த நவீன யுகத்தில் பிரச்னை என்னவென்றால் நம் குல தெய்வம் எது என்பதையே பலர் அறியமாட்டார்கள். காரணம், பிழைப்புக்காக ஊர் மாறிச் சென்று ஓரிரு தலைமுறைகள் ஆகியிருந்தால் அவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். ஒரு சிலருக்கோ குலதெய்வத்தை எப்படி வழிபடுவது என்று வழிகாட்டப் பெரியவர்கள் வீட்டில் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்படிக் குலதெய்வத்தை வழிபட்டு அவற்றின் அருளைப்பெறுவது என்பது முக்கியமான கேள்வி. ஒரு சிலர் குலதெய்வத்தை பூஜை செய்து வீட்டுக்கு வரவழைத்துக் குறி கேட்பதுண்டு. ஆனால் அது சரியா என்பன போன்ற கேள்விகளும் நம்மிடையே உள்ளன.
பெரும்பாலும் குலதெய்வம் என்பது நம் குலத்தைக் காப்பாற்றிய வீரனாகவோ அல்லது குலத்துக்காகத் தன்னைத் தியாகம் செய்த பெண்ணாகவோ இருப்பார்கள். எனவே, வழக்கமான சாமிகளை விடக் குலசாமி கொஞ்சம் துடியான தெய்வமாகவே பார்க்கப்படுகிறது. பல குலதெய்வங்களுக்கு உருவம் இருக்காது. கற்களாகவோ ஆயுதங்களாகவோ இருப்பதும் உண்டு. குல தெய்வம் இருக்கும் இடத்துக்குச் சென்று அவற்றை வழிபடுவதுதான் மிகவும் சிறந்தது. சில கோயில்களில் அங்கிருந்து ஒரு தூசி கூட ஏன் விபூதி கூட எடுத்துவரும் வழக்கம் இருப்பதில்லை. ஐயனார் கோயிலில் அத்தனை செங்கலும் ஐயனார் என்பது பழமொழி. அங்கே படைத்த உணவுப்பொருள்களை அங்கேயே தீர்த்துவிடுவார்கள். அல்லது அங்கேயே குழிதோண்டிப் புதைத்துவிட்டு வந்துவிடுவார்கள். இதன் தாத்பர்யம் குலதெய்வத்தின் இடத்திலிருந்து மண்ணையோ வேறு பொருள்களையோ எடுத்துவந்தால் தெய்வமும் நம் பின்னாடியே வந்துவிடும் என்பதுதான்.
சில குலதெய்வங்களின் படத்தைக் கூட வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். மனதால் நினைத்து வழிபடும் பழக்கமே சில குடும்பங்களில் உள்ளது. அப்படியானால் குலதெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்றால் வழிபடலாம். ஆனால் அதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
குலதெய்வ வழிபாடு குறித்து மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.
12 ராசிகளுக்கான சுருக்கமான இன்றைய ராசிபலன்
விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
16.4.21
மேஷம் - அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுக்கலாம். சகோதர உறவுகள் உதவிகரமாக இருப்பார்கள். - ஆல் இஸ் வெல்!
ரிஷபம் - செலவு : பணவரவு காணப்பட்டாலும் செலவுகள் அதிகரித்தவண்ணம் இருக்கும். செயல்களிலும் சிறு நிதானம் தேவைப்படும் நாள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. - செலவே சமாளி!
மிதுனம் : மகிழ்ச்சி: குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாள். உறவினர்கள் உங்கள் மனதைப் புரிந்துகொண்டு நடப்பார்கள். மன வருத்தங்கள் நீங்கும். - என்ஜாய் தி டே!
கடகம் - மரியாதை : வரவு செலவும் சரியாக இருக்கும் நாள். உங்கள் ஆலோசனைக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும். குடும்பத்தினரால் ஆதாயம் உண்டு. - திறமைக்கு மரியாதை!
சிம்மம் : சாதகம் : இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள உகந்த நாள். செயல்கள் அனைத்தும் சாதகமாகும். என்றாலும் மூன்றாம் நபரின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டாம். - சாதகமான ஜாதகம் இன்று!
கன்னி - உற்சாகம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். பிற்பகலுக்கு மேல் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது மட்டும் பொறுமை நல்லது. - நா காக்க!
துலாம் - நிதானம் : இன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள். - இறைவன் இருக்க பயம் ஏன்?
விருச்சிகம்
சிந்தனை : அனைத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து இறங்கவும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உறவுகளோடு விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. - ரிலாக்ஸ் ப்ளீஸ்!
தனுசு :
நன்மை : குடும்பத்தில் நன்மைகள் அதிகரிக்கும். முயற்சிகளுக்குக் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு வெளியிடத்தில் ஏற்பட்ட ஓர் அவப்பெயர் நீங்கும். - நாள் நல்ல நாள்!
மகரம் :
பணவரவு : எதிர்பார்த்த பணவரவு இருக்கும் நாள். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். குடும்பத்தினரால் மகிழ்ச்சியும் ஆதாயமும் கிடைக்கும். உற்சாகமான நாள். - ஆல் தி பெஸ்ட்!
கும்பம் - அலைச்சல் : செயல்கள் அனுகூலமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!
மீனம் - பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். தேவையற்ற விவாதங்களில் தலையிடவோ தொடங்கவோ வேண்டாம். - நோ ஆர்கியுமென்ட்ஸ் ப்ளீஸ்!
source https://www.vikatan.com/spiritual/astrology/is-it-right-to-worship-family-god-at-home
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக