மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களை செயல்படுவதற்கு அனுமதித்தும், அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவு பணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
``பதிவுத்துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில், சித்திரை முதல் தேதி (இன்று), ஆடிப்பெருக்கு (3.8.2021) மற்றும் தைப்பூசம் (18.1.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், மங்களகரமான நாட்களில் பொது மக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய தினங்களில் பதிவு அலுவலர்கள் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுகளுக்கு பதிவுச் சான்றிதழ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் கோரிக்கை வந்தது.
இதன் அடிப்படையில், சித்திரை முதல் தேதி (இன்று), ஆடிப்பெருக்கு (3.8.2021) மற்றும் தைப்பூசம் (18.1.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவினை மேற்கொள்ளும் மற்றும் அந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள எண்ணுவோர் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.
source https://www.vikatan.com/business/news/tamilnadu-registration-offices-will-function-on-three-auspicious-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக