இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,36,89,453 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 879. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,71,058 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,22,53,697 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 12,64,698 பேர் சிகிசையில் இருக்கிறார்கள். இந்தியாவில் 10,85,33,085 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!
காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடனான காணொலி கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் நடத்தினார். அதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடிக்கு அது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் அவர், ``உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்திய அதிகரிக்கும் அதே நேரத்த்தில், மேலும் பல தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிப்பது பயனுள்ளதாக இருக்கும். மேலும் தடுப்பூசி போடுவதற்கான தகுதியையும் வயது மட்டுமின்றி, தேவை, பாதிப்பு நேரிடக்கூடிய அபாயத்தை அடிப்படையாகக் கொண்டு விரிவுபடுத்த வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/13-04-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக