Ad

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 1,84,372 பேருக்கு தொற்று... 1,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 1,84,372 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,38,73,825 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,027. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,72,085 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,23,36,036 ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 13,65,704 பேர் சிகிசையில் இருக்கிறார்கள். இந்தியாவில் 11,11,79,578 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/14-04-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக